விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, நான் என்ன டிராமா செய்தேன்? நான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். உங்களிடம் சொல்லிவிட்டு போனால் மட்டும் அன்பாக பேசுவீர்களா? நான் என்ன தவறு செய்து விட்டேன். என் அண்ணன் குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற ஒரு பொய் சொல்லி கல்யாணம் செய்தேன் என்று கொந்தளித்தார். பாண்டியனுமே பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோமதி, எல்லாமே உங்கள் பேச்சை கேட்டு தான் நடக்கணுமா? எனக்காக நான் ஒரு முடிவெடுக்க கூடாதா? என்று முதல் முறையாக பாண்டியனை எதிர்த்து பேசி இருந்தார்.

கோமதி, இந்த வீட்டில் எல்லா விஷயத்தில் நீங்களே முடிவு எடுத்திருக்கிறீர்கள். எதையாவது என்னிடம் கேட்டிருக்கிறீர்களா? சரவணன், அரசி கல்யாணம் என்று எல்லா முடிவையும் நீங்கள்தான் எடுத்தீர்கள். நீங்கள் என்னிடம் கேட்கவில்லை என்று நான் கோபப்பட்டேனா? இனிமேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது என்றெல்லாம் கொந்தளித்தார். சரவணன் தன் அம்மாவை சமாதானம் செய்ய வந்தார். இருந்தாலும் கோமதி, சரவணனை திட்டி விட்டார். பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். ராஜி- மீனா எல்லோருமே கோமதியை சமாதானம் செய்ய பார்த்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது காந்திமதி, இருவரையும் சேர்த்து வைக்க தான் இந்த திட்டம் போட்டேன். ஆனால் அது சொதப்பிவிட்டது என்று உண்மையை சொன்னார். காந்திமதியின் பிளானை கேட்டு ராஜி- மீனா ஷாக் ஆனார்கள். கோமதி எதுவும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், செந்தில்- கதிர் இருவரும் பேசியதை நினைத்து சரவணன் இடம் புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பழனி, வீட்டிற்கு பாண்டியனை அழைத்தார். பாண்டியன், இனிமேல் நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன். எல்லோருமே அவரவர்கள் விருப்பப்படி இருக்கட்டும் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், நீ என்னிடம் சொல்லாமல் எதற்காக கோயிலுக்கு போனாய் என்று கேட்கிறார். மீனா, நான் சொல்லிடு தான் போனேன் என்று வாய்ஸ் மெசேஜ் காண்பிக்கிறார். செந்திலால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் பழனி, பாண்டியனை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டிற்கு வந்தவுடன் பழனிவேல், என் மச்சானுக்காக பேச நான் இருக்கிறேன். என் மச்சான கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றெல்லாம் கோமதியை வெளுத்து
வாங்கினார்.
சீரியல் ட்ராக்:
கோமதி, உன் வீட்டு பிரச்சனையை உன்னோடு வைத்துக்கொள். என் வீட்டு பிரச்சனையில் தலையிடாதே என்று திட்டி பழனியை அனுப்பி விடுகிறார். அதற்கு பின்பு பாண்டியன், செந்தில்- கதிரை பார்த்து ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசினீர்கள்? நான் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை ரெண்டு பேருமே எடுத்து வையுங்கள். இரண்டு மாதம் உங்களுக்கு டைம் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். செந்தில், கதிரால் பேசவே முடியவில்லை. கோமதி எதற்காக பணத்தை மீண்டும் கேட்கிறீர்கள் என்கிறார். பாண்டியன் இது என்னுடைய விஷயம் யாரும் தலையிட வேண்டாம் என்று திட்டி விட்டு ஹோட்டலில் வாங்கி வந்த சாப்பாட்டை சாப்பிடுகிறார்.






