விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வீட்டில் கடை எங்கே? இருக்கிறது என்று விசாரித்தார்கள். பழனிக்கு கடை இருக்கும் இடம் தெரியவில்லை. பின் இதைப்பற்றி கேட்பதற்காக பழனி தன்னுடைய அண்ணன்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவருடைய அண்ணன்கள் எதுவுமே சொல்லாமல் சர்ப்ரைஸ் என்று சொன்னார்கள். பின் பழனி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார். பின் அந்த கடை இருக்கும் இடம் பற்றி சொல்ல சொல்கிறார்கள். இதற்கு பழனி, எதற்கு அங்கு வைத்தீர்கள் என்றார்.

பாண்டியன், வீட்டில் யாருமே பழனி கிடைத்திருக்கும் விழாவிற்கு போகவே இல்லை. கோமதி எல்லோரிடமும் போக சொன்னார். ஆனால் சரவணன், செந்தில் எல்லோரும் மறுத்தார்கள். மீனா, நான் வேலையை முடித்துவிட்டு பார்த்து வருகிறேன், கவலை படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பழனி தன்னுடைய அண்ணங்களுடன் தன்னுடைய கடைக்கு வந்தார். அப்போது பாண்டியன் வைத்திருக்கும் கடை தெருவில் தான் பழனிக்கும் கடை வைத்திருந்தார்கள். இதை அறிந்து பழனி ஷாக் ஆனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் பழனி, இந்த கடை வேண்டாம். வேறு எங்காவது வைக்கலாம். மச்சானுடைய கடை பாதிக்கும் என்றார். ஆனால் முத்துவேல்- சக்திவேல் இருவருமே கேட்கவில்லை. சுகன்யா, நீங்கள் இங்கு பிரச்சனை செய்தால் நான் கிளம்பி போய் விடுவேன் என்றெல்லாம் வழக்கம்போல சண்டை போட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பேசி புரிய வைத்தார்கள். ஆனால், பழனிக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் தன்னுடைய அண்ணன்கள் கட்டாயத்தினால் கடைக்குள் செல்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன், சரவணன் வந்தார்கள். அப்போது பழனி, தனக்கு போட்டியாக கடை திறந்து இருக்கிறார் என்று பாண்டியன் தவறாக புரிந்து கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சரவணன், பாண்டியன் இருவரையும் பார்த்துவிட்டு குமார் உள்ளே அழைக்கிறார். ஆனால், பாண்டியன் உள்ளே வராமல் பழனியை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். பழனிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. பின் தன் அண்ணன்கள் வற்புறுத்ததால் பழனி கடையை திறந்து விடுகிறார். சுகன்யா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு போன பாண்டியன், இவ்வளவு பெரிய துரோகத்தை உன் தம்பி செய்வான் என நினைத்து பார்க்கவில்லை.

சீரியல் ட்ராக்:
நம்முடைய கடைக்கு போட்டியாக தான் கடையை ஆரம்பித்திருக்கிறான் என்றெல்லாம் உண்மை தெரியாமல் பழனியை திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து பழனி வீட்டிற்கு வந்து விடுகிறார்.
அப்போது கோமதி, இப்படியா நீ நடந்து கொள்வது? நடிக்காதே, இவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனா? உனக்கும் அண்ணன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றெல்லாம் கோபமாக பேசுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பழனிக்கு எதிராக பேசுகிறார்கள். அவர் தரப்பு நியாயத்தை யாருமே கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.






