விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், வேலை செய்து கொண்டிருக்கும்போது அஞ்சலி போன் செய்கிறார். அதை கவனித்த பாண்டியன், நான் உன் வாழ்க்கையில் தலையிடாமல் இருந்திருந்தால் நீ அஞ்சலியை கல்யாணம் செய்துகொண்டு இருந்திருப்பாய். இப்பவும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நல்லபடியாக விவாகரத்து முடியட்டும். உனக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன். இருந்தாலும் எதற்கும் அவசரப்படாதே அமைதியாக இரு. அந்தப் பெண்ணை அடிக்கடி சந்தித்து பேசாதே என்றார்.

சரவணன் சரி என்றார். இன்னொரு பக்கம் காந்திமதி, அரசி-குமாரை சந்தித்து பேச வைக்க முயற்சி செய்தார். கோமதி, கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி கோமதி கீழே விழுந்து விட்டார். விழுந்ததில் கோமதி, நெஞ்சை பிடித்துக் கொண்டு வலி தாங்க முடியாமல் கத்தினார். ஆனால், பாண்டியன் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் கோமதி நாடகம் ஆடுகிறார் என்று கிளம்பி விட்டார். பின் கோமதி மயங்கி விட்டார். அந்த சமயம் வந்த சரவணன் தன்னுடைய அம்மாவின் நிலையை கண்டு ரொம்பவே பதறினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் உதவிக்கு சரவணன், பழனி-சுகன்யா இருவரையும் அழைத்து வந்தார். எல்லோருமே பதறிப் போய் கோமதியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு போனார்கள். அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன், பாண்டியனிடம் நடந்ததை எல்லாம் சொன்னார். பாண்டியனுமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடல் போனார். அங்கு கோமதி சீரியசான நிலையில் இருப்பதாக சொன்னார்கள். மீனா- கதிர் எல்லோருமே பாண்டியனுக்கு ஆறுதல் சொன்னார்கள். பாண்டியன் தான் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, ஹாஸ்பிடலில் கவலைக்கிடத்தில் இருக்கிறார். பாண்டியன் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். கோமதிக்குசிகிச்சை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் கோமதியின் நிலைமை முன்னேற்றம் இல்லை. கதிர், மீனா, சரவணன் எல்லோரும் கோமதி நினைத்து கவலைப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் காந்திமதி, அரசி எல்லோருமே அழுது கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பாண்டியன், கோமதியை பார்த்து பேசுகிறார். ஆனால், கோமதி சுயநினைவுக்கு வரவே இல்லை. இதனால் பாண்டியன் அழுகிறார். அதற்குப்பின் பாண்டியனை, சரவணன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். பாண்டியனிடம் வீட்டில் உள்ள எல்லோருமே விசாரிக்கிறார்கள். ஆனால், அவரால் எந்த பதிலும் பேச முடியவில்லை. அதற்கு பின்பு ரூமுக்கு சென்ற பாண்டியன், கோமதி உடனான நினைவுகளை நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். சரவணன் தன் அப்பாவிற்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார்.






