விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மலர், குடும்பத்தில் எல்லோருமே பொங்கல் வைப்பதற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார்கள். அங்கு மலரின் அம்மாவை பார்த்தவுடன் யாருமே கண்டு கொள்ளவில்லை. கோமதி மட்டும் அன்பு அக்கறையோடு விசாரித்தார். தங்கராஜ் வந்தவுடன் மலர் குடும்பத்தில் எல்லோருமே விழுந்து விழுந்து கவனித்தார்கள். இதை பார்த்து கோமதிக்கு கடுப்பாகிறது. பின் எல்லோருமே சந்தோஷமாக பொங்கல் வைத்துவிட்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் முத்துவேலை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். கதிர்- முத்துவேல் இருவரும் கிளம்பி விட்டார்கள்.

இன்னொரு பக்கம் முத்துவேல் போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதால் சக்திவேல் பதறினார். பின் கதிர்- முத்துவேல் இருவரும் ஒன்றாக போன விஷயத்தை தன்னுடைய வீட்டில் சொல்லி சண்டை போட்டார் சக்திவேல். ஒரு கட்டத்தில் சக்திவேல், பாண்டியன் இடம் தன் அண்ணனை கேட்டு
கொந்தளித்தார். கதிருக்கு போன் செய்து பாண்டியன் விசாரித்தார். அப்போது கதிர், தன்னுடன் தான் முத்துவேல் இருக்கும் விஷயத்தை சொன்னார். இதனால் சக்திவேல்- பாண்டியன் இடையே சண்டை வருகிறது. பின் மாரி, சக்திவேலை அங்கிருந்து அழைத்து சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
முத்துவேலுக்கு இருக்கும் பிரச்சனையை பாண்டியன் தெரிந்து கொண்டு வெளியில் சொல்லாமல் கதிருக்கு சப்போர்ட் செய்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே கதிரிடம், முத்துவேலுக்கு என்ன நடந்தது என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கதிர் உண்மையை சொல்லவில்லை.
பாண்டியன், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம். எல்லோரும் அவரவர்கள் வேலையை செய் என்று திட்டி அனுப்பி விடுகிறார். இருந்தாலும் ராஜிக்கு தன் தந்தையை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பின் கதிரை தனியாக அழைத்து செல்கிறார் பாண்டியன்.

சீரியல் ட்ராக்:
பின் கதிரிடம் பாண்டியன் நடந்ததை விசாரிக்கிறார். முத்துவேலிற்கு கேன்சர் இருக்கும் பிரச்சினை பற்றி எல்லா விவரத்தையும் கதிர் சொல்கிறார். அதைக் கேட்டு பாண்டியனுக்கு கஷ்டமாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அவர் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கதிருக்கு சப்போர்ட் செய்கிறார். அதோடு கதிர் தன் குடும்பத்திற்காக செய்த எல்லாவற்றையுமே நினைத்து பாண்டியன் ரொம்பவே பெருமைப்படுகிறார். இன்னொரு பக்கம் முத்துவேல், தன் பிரச்சினை பற்றி சொல்லாமல் பொய் சொல்லி விடுகிறார். வீட்டில் உள்ளே எல்லாமே நம்பி விடுகிறார்கள். அதற்குப்பின் முத்துவேல் தன்னுடைய மனைவியிடம் கதிரை பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=WfsuWg4yT14
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோமதி, ராஜி இருவரும் முத்துவேலை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகிறார்கள். பின் இருவரும் முத்துவேலை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள். அதற்கு பின் முத்துவேல் வெளியே வருகிறார். அவரை பார்த்தவுடன் பாண்டியன் அங்கே நிற்கிறார். முத்துவேலிடம் பாண்டியன், எதுவாக இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் சொல்கிறார். பின் முத்துவேல் கீழே விழ போகும்போது பாண்டியன் பிடித்து விடுகிறார்.






