விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியம், சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காண்பித்து இதற்காகத்தான் உங்கள் பையன் என் மகளை விவாகரத்து செய்கிறானோ. உங்கள் பையனை ஒழுங்காக வளர்க்கவில்லை. எங்களை குறை சொல்கிறீர்கள் என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார்.பாண்டியன் பயங்கரமாக டென்ஷன் ஆனார். அப்போது வந்த சரவணன், பாக்கியம்- மாணிக்கத்திடம் சண்டை போட்டார். இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா இருவரும் பாண்டியன் வீட்டிற்கு சென்ற விஷயத்தை அறிந்து தங்கமயில் வேகமாக வந்தார்கள்.

மாணிக்கம், சரவணனை ரொம்ப மோசமாக பேசியதால் கோபத்தில் சரவணன் மாணிக்கத்தை அடித்து விட்டார். இதை பார்த்து தங்கமயில், தன்னுடைய அப்பா அம்மாவை தடுத்து எதற்காக இங்கே வந்தீர்கள்? என்று கேள்வி கேட்டார். கோமதி, நல்லா நாடகம் போடுகிறாய். உனக்கு வெட்கமா இல்லையா? என்று தங்கமயில் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இருந்தாலும் தங்கமயில் எதுவும் சொல்லாமல் தன்னுடைய அப்பா, அம்மாவை அங்கிருந்து அழைத்து செல்ல பார்த்தார். பாக்கியம், தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல வந்தார். உடனே மயில், தன்னுடைய அம்மாவை தடுத்து அங்கிருந்து அழைத்து வந்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் வீட்டிற்கு வந்த பாக்கியம், எதற்காக உண்மையை சொல்ல மறுக்கிறாய் என்று கேட்டார். மயில், முடிந்து போன விஷயத்தை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. என் குழந்தையை எனக்கு பார்த்துக்க தெரியும். நான் இருப்பது பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு போகிறேன் என்றார். மாணிக்கம் அதெல்லாம் வேண்டாம் என்று தன் மகளை தடுத்து விட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில் வீட்டிலிருந்து வந்ததால் கோமதி ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதியை சமாதானம் செய்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், தான் பிள்ளை செய்யும் இடத்தில் மீண்டும் மீண்டும் லஞ்சம் வாங்கினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, மதியம் சாப்பாடுஎடுத்துக் கொண்டு வராததால் கதிர் அவரை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு போகிறார். ராஜி, கதிர் இருவருவே தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் காந்திமதி, குமார்- அரசியை சந்தித்து பேச வைப்பதற்காக வேண்டுமென்றே சோப் இல்லை, பிரஸ் இல்லை என்று சத்தம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த அரசி, உங்கள் திட்டம் எனக்கு புரிந்து விட்டது. எங்களை சேர்க்க பார்க்கிறீர்களா? என்று திட்டி விட்டு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் கடையில் சரவணன் வேலை செய்து கொண்டிருக்கிறார். அஞ்சலி கோவிலுக்கு வர சொன்னதால் சரவணன் ஏதேதோ காரணங்களை சொல்லி சென்று விடுகிறார். பாண்டியனுக்கு சந்தேகம் வருகிறது. பின் பழனியை கடையில் விட்டு பாண்டியன், சரவணன் என்ற கோவிலுக்கு போகிறார். அங்கு சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து பாண்டியனுக்கு ஷாக்காக இருக்கிறது. அதற்குப்பின் பாண்டியன், உன் மாமனார் சொன்னபடி கோயிலில் நீ சந்தித்து பேசும் பெண் யார்? அவருக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் என்றெல்லாம் கேட்கிறார். சரவணன் ஷாக் ஆகிறார்






