விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் முத்துவேலுக்கு இருக்கும் பிரச்சனையை பாண்டியன் தெரிந்து கொண்டு வெளியில் சொல்லாமல் கதிருக்கு சப்போர்ட் செய்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே கதிரிடம், முத்துவேலுக்கு என்ன நடந்தது என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், கதிர் உண்மையை சொல்லவில்லை. பாண்டியன், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம். எல்லோரும் அவரவர்கள் வேலையை செய் என்று திட்டி அனுப்பி விட்டார். இருந்தாலும் ராஜிக்கு தன் தந்தையை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பின் கதிரை தனியாக அழைத்து சென்றார் பாண்டியன்.

பின் கதிரிடம் பாண்டியன் நடந்ததை விசாரித்தார். முத்துவேலிற்கு கேன்சர் இருக்கும் பிரச்சினை பற்றி எல்லா விவரத்தையும் கதிர் சொன்னார். அதைக் கேட்டு பாண்டியனுக்கு கஷ்டமாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அவர் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கதிருக்கு சப்போர்ட் செய்தார். அதோடு கதிர் தன் குடும்பத்திற்காக செய்த எல்லாவற்றையுமே நினைத்து பாண்டியன் ரொம்பவே பெருமைப்பட்டார். இன்னொரு பக்கம் முத்துவேல், தன் பிரச்சினை பற்றி சொல்லாமல் பொய் சொல்லி விட்டார். வீட்டில் உள்ளே எல்லாமே நம்பி விட்டார்கள். அதற்குப்பின் முத்துவேல் தன்னுடைய மனைவியிடம் கதிரை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ராஜி, அப்பாவிற்கு என்ன ஆனது? உண்மையை சொல் என்றார். கதிர், அதெல்லாம் ஒன்றுமில்லை. சின்ன பிரச்சனை தான். சீக்கிரமாகவே குணம் ஆகி விடுவார் என்று சொல்லி சமாதானம் செய்தார். அதற்குப்பின் செந்தில், மீனாவிற்காக தங்க வளையல் வாங்கிக் கொண்டு வந்து தந்தார். மீனா, எப்படி வாங்கினாய் பணம் இந்த பணம் எப்படி வந்தது? லஞ்சம் வாங்கினாயா? என்று கேட்டார். அதைக் கேட்டு செந்தில், உண்மை தெரிந்து விட்டதோ என்று ஷாக் ஆனார். மீனா கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததால் செந்தில் சீட்டு பணம் போட்டு இருந்தேன். அதில் தான் விழுந்தது என்று பொய் சொல்லி விட்டார். அதற்குப்பின் பாண்டியன், ராஜியிடம் எக்ஸாம் பற்றியெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், கோமதியும் ராஜியையும் முத்துவேலை பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறார். கோமதி, ராஜி இருவருமே முத்துவேல் வீட்டிற்கு செல்கிறார்கள். காந்திமதி ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் முத்துவேலிடம் கோமதி, ராஜி இருவரும் நலம் விசாரிக்கிறார்கள். முத்துவேலுமே கோபப்படாமல் அக்கரையாக பேசுகிறார். கதிர் செய்த உதவியை பற்றி ரொம்ப பெருமையாகவும் பேசுகிறார். அதற்குப்பின் ராஜி தன்னுடைய அப்பாவை வாக்கிங் அழைத்து செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் பார்த்து குமாருக்கு கோபம் தான் வருகிறது. அப்போது பாண்டியன் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். ராஜி, ஏதோ ஒரு வேலையாக உள்ளே சென்று விடுகிறார். அப்போது பாண்டியன், உங்களுக்கு இருக்கும் பிரச்சனை எனக்கு தெரியும். எதுவாக இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், பயப்படாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்றெல்லாம் சொல்கிறார். முத்துவேலுமே, பாண்டியன் இடம் விரோதம் காட்டாமல் நல்லபடியாக பேசுகிறார்.






