விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோயிலில் பாக்கியம், கோமதிக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் கொந்தளித்த கோமதி, மீனாவையும் திட்டிவிட்டு சென்றார். ஒரு கட்டத்தில் தங்கமயில், யாரும் எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். என் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். தயவுசெய்து நீ அமைதியாக இரு அம்மா. பிரச்சனையை இன்னும் பெரிதாக்காதே என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் காந்திமதி, கோமதியிடம் பேச சொல்லி பாண்டியனுக்கு அறிவுரை சொன்னார். ஆனால், பாண்டியன் அதை கண்டு கொள்ளவே இல்லை.

பின் காந்திமதி, அரசி இடம் குமாரை திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசி இருந்தார். பயந்துபோன அரசி, இது என் அப்பாவிற்கு தெரிந்தால் கொன்னு போட்டு விடுவார். குமாரை திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத விஷயம் என்று சொன்னார். அதற்குப்பின் மீனா-செந்தில் இருவரும் சந்தோஷமாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டார்கள். அந்த சமயம் பார்த்து தங்கமயில் போன் செய்தார். செந்திலுக்கு தெரியாமல் மீனா போன் பேசி இருந்தார். அப்போது தங்கமயில், மீனாவிடம் மன்னிப்பு கேட்டு என்னுடைய குழந்தைக்காக நான் யாரிடமும் நிற்கவில்லை என்று எமோஷனலாக பேசி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி, மீனாவும் நானும் சேர்ந்து கோயிலுக்கு போகிறோம். நாங்கள் வருவதற்கு இரவு ஆகிவிடும். பிள்ளைகளிடம் சொல்லிவிடு. அவர் கேட்டால் மட்டும் சொல். இல்லை என்று சொல்லாதே என்றார். காந்திமதியும் சரி என்றார். அதற்கு பின் கோமதி கிளம்பி சென்று விட்டார். ஆனால், கோமதி ஃபோனை வீட்டிலே விட்டு சென்று விட்டார். பின் கோமதியின் போனை பார்த்து காந்திமதி, பாண்டியன்- கோமதி இருவரையும் சேர்த்து வைக்க திட்டம் போட்டார்.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் காந்திமதி, கோமதி எங்கே என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது என்று நாடகம் ஆடினார். ராஜி, அரசி, கதிர் எல்லோருமே தன் அம்மாவிற்கு போன் செய்தார்கள். ஆனால், கோமதி போன் சைலண்டில் போட்டு காந்திமதி மறைத்து வைத்து விட்டார். இன்னொரு பக்கம் மீனாவுடன் சேர்ந்து கோமதி கோயிலுக்கு சென்று இருந்தார்.
https://www.youtube.com/watch?v=AXaZlFL4wxY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் காந்திமதி, கோமதி எங்கே தெரியவில்லை என்று டிராமா ஆடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். பின் பாண்டியன் வந்தவுடன் செந்தில்- கதிர் இருவருமே பாண்டியனை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து கோமதி வந்து விடுகிறார். உடனே பாண்டியன், என்ன பேச்சு பேசினீர்கள்? நான் உங்களுக்கு கொடுத்த 10 லட்ச ரூபாய் பணத்தை இன்னும் இரண்டு மாதத்திற்குள் எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்கிறார். செந்தில்- கதிர் இருவரும் அமைதியாக நிற்கிறார்கள்.






