விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியத்தை மீனா தடுத்து நிறுத்தி அக்காவின் முடிவுக்கு மதிப்பு கொடுங்கள். அவருடைய வாழ்க்கையை பார்க்க விடுங்கள் என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் சரவணன், அஞ்சலி இடம் தங்கமயில் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். அஞ்சலி, நீ பேசியது தவறு என்று அட்வைஸ் செய்தார். பின் தங்கமயில் மாத்திரை இல்லை என்று கடைவீதிக்கு வந்தார். அப்போது ஒரு கடையில் சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆனார். அஞ்சலி, சரவணனை தொட்டு தொட்டு பேசுவதை பார்த்து தங்கமயில் உடைந்து போய் இருந்தார்.

வீட்டிற்கு வந்த தங்கமயில், சரவணன் அஞ்சலியுடன் சேர்ந்திருப்பதை நினைத்து ரொம்ப எமோஷனாக அழுதார். தன்னுடைய அம்மா கேட்டுமே மயில் எந்த உண்மையையும் சொல்லவில்லை. பின் பாண்டியன் போடுவதற்கு சட்டை இல்லை என்று வீட்டில் அலப்பறை செய்து கொண்டிருந்தார். கோமதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பாண்டியன் அவருடைய வேலையை செய்தார். காந்திமதி எவ்வளவு சொல்லியுமே கோமதி கேட்கவில்லை. பின் பாண்டியன் தன்னுடைய துணிகளை எல்லாம் துவைத்து போட்டு விட்டு கடைக்கு சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் செந்திலுக்கு போன் செய்த மீனாவின் அப்பா, தனக்கு தெரிந்த ஒருவருக்கு டாக்குமென்ட்டை சரியாக முடித்து தந்தால் பணம் தருவதாக சொன்னார். செந்திலுக்கு பதட்டமாக இருக்கிறது. இருந்தாலும் மீனாவின் அப்பா சொன்னதால் அந்த வேலையை செய்து முடிக்க செந்தில் ஒத்துக்கொண்டார். செந்தில் தன்னுடைய உயர் அதிகாரியிடம் அவரை அழைத்துச் சென்று பேசி டீலிங் முடிகிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, போலீஸ் ஆக ரொம்ப கஷ்டமா இருக்கு. படிக்கவே முடியவில்லை தூக்கிப்போட்டு போகலாம் என்று இருக்கிறேன் என்றெல்லாம் பேசுகிறார். இதனால் கதிர் கோபப்பட்டு ராஜியை திட்டி விடுகிறார். இதனால் ராஜி கோபித்துக் கொண்டு போகிறார். அதற்குப்பின் வீட்டில் கதிர், உன்னுடைய சின்ன வயசு ஆசையான போலீஸ் கனவிற்கு நீ என்ன முயற்சி செய்திருக்கிறாய் என்று கேட்கிறார். ராஜியால் எதுவுமே சொல்ல முடியவில்லை. கதிர், இனிமேல் நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். உனக்கே விருப்பம் இருந்தால் லட்சியத்தை நோக்கி போ என்று சொல்லி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் விடியற்காலையில் ராஜி யாரிடமும் சொல்லாமல் உடற்பயிற்சி செய்ய சென்று விடுகிறார். பின் கதிர், ராஜியை தேடி செல்கிறார். ராஜி கடினமாக உழைத்துக் கொண்டிருப்பதை பார்த்து கதிருக்கு பெருமையாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மீனாவை பார்த்து மயில், சரவணன் மாமா வேற ஒரு பெண்ணுடன் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடைய நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாக உடைந்து விட்டது என்றெல்லாம் சொல்லி அழுகிறார். மீனா ஆறுதல் சொல்கிறார். பின் மயில் கிளம்பி வேலைக்கு செல்கிறார். அந்த சமயம் வந்த செந்தில், மீனாவிடம் பேசுகிறார். மீனா, சரவணன் மீது இருந்த கோபத்தை செந்தில் இடம் காண்பித்து விட்டு செல்கிறார்.






