விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், நீங்கள் சொன்ன பொய்யால் என் வாழ்க்கை இன்னும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டது. அவர்களுக்கு என் மீது வெறுப்பு இன்னும் அதிகமாகிவிட்டது என்று சொல்லி அழுது கொண்டிருந்தார். பாக்கியா, இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. உன்னுடைய வாழ்க்கையை நான் காப்பாற்றுவேன். கவலைப்படாதே. அம்மாவை நம்பு என்று மீண்டும் சதி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் கோமதி கவலையில் அழுது கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பழனி, கோமதிக்கு ஆறுதல் சொன்னார். பின் பாண்டியன்- கோமதி இருவருமே சேர்ந்து பழனியிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

இன்னொரு பக்கம் காந்திமதி ரொம்ப சந்தோசமாக இருந்தார். அதை பார்த்து குமார், பாட்டி முகத்தில் ஒரே பூரிப்பு என்று சொல்கிறார். உடனே காந்திமதி, எவ்வளவு பகை இருந்தாலும் கோமதி, ராஜிக்கு பிரச்சனை என்றவுடன் நீங்கள் இருவரும் நின்றது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதுவே எனக்கு போதும்
என்றார். அதற்கு முத்துவேல், இதற்காக நாங்கள் சேர்ந்து விட்டோம் என்று அர்த்தம் கிடையாது என்றார். மச்சான் என்றெல்லாம் கூப்பிட முடியாது என்று சக்திவேல் சொன்னார். காந்திமதி, நான் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இதுவே எனக்கு போதும் என்று எமோஷனாக அழுதார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ராஜி- கதிர் இருவரும் தங்கமயில் செய்த துரோகத்தை நினைத்து எமோஷனலாக பேசி அழுது கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சரவணன், தன் குடும்பத்தை போலீஸ் கைது செய்து சித்திரவதை செய்வதை போல கனவு கண்டு கத்தினார். பழனி, சரவணனுக்கு தைரியம் சொல்லி தூங்க வைத்தார். இன்னொரு பக்கம் கோமதி, அரசி எல்லோருமே போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை நினைத்து புலம்பினார்கள். பாண்டியன் இதை எல்லாம் பார்த்து வருத்தப்பட்டார்.

சீரியல் ட்ராக்:
கோமதி, அரசிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பாண்டியன் வந்தார். அதற்கு பின் பாண்டியனுக்கு தூக்கம் வரவில்லை. பின் பாண்டியன் எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்தார். ராஜி, நானே செய்து கொள்கிறேன் என்று தடுத்துமே பாண்டியன் கேட்க வில்லை. பாண்டியன் வேலைக்கு கிளம்பி வரும்போது
முத்துவேல் எதிரே நின்றார். முத்துவேல்-பாண்டியன் இருவரும் வாய் திறந்து பேசாமல் கண் மூலமாக பேசி கொண்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி தான் செய்த தவறை உணர்ந்து பழனியிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசுகிறார். பின் ராஜி, தன் அப்பாவிடம் கொடுக்க சொல்லி இரண்டு கடிதத்தை பழனியிடம் கொடுக்கிறார். வீட்டிற்கு வந்த பழனியிடம் காந்திமதி, கோமதி குடும்பத்தை பற்றி எல்லாம் விசாரிக்கிறார். அதற்குப்பின் பழனி, ராஜி கொடுத்த கடிதத்தை தன்னுடைய அண்ணன்கள் இடம் கொடுக்கிறார். முத்துவேல் அந்த கடிதத்தை பிரித்து படிக்கிறார். ராஜி எமோஷனலாக தன் அப்பாவிற்கு நன்றி சொல்லி எழுதி இருக்கிறார் முத்து வேல் கடிதத்தை படித்து அழுகிறார். இன்னொரு பக்கம் சக்திவேலும், ராஜி எழுதிய கடிதத்தை பார்த்து ரொம்பவே அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






