விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியன், வீட்டில் கடை கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கணக்கில் ஒரு ₹1000 விடுகிறது என்று சொல்ல பாண்டியன் அதிர்ச்சி ஆகி, உன் மகன் வேலை தான் என்று சொன்னவுடன் கதிர் வந்து, நான் எடுக்கவில்லை என்கிறார். கடைசியில் செந்தில் பொய் சொல்லி சமாளிக்க, பாண்டியனும் நம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் மொபைலுக்கு தங்கமயில், தாங்கள் எடுத்த போட்டோக்களை அனுப்பி இருந்தார்.

அதை பார்த்து ஆச்சரியப்பட்டும், தங்கமயிலை பற்றி பெருமையாகவும் பாண்டியன் பேசி இருந்தார்.
இன்னொரு பக்கம் தங்க மயிலின் அம்மா போன் செய்து, மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வா, நான் சொல்வதைப் போல் செய் என்று தேவையில்லாத வேலை பார்க்கிறார். இந்த வாரம் தங்கமயில், பாண்டியன் வீட்டிற்கு வீடியோ கால் செய்து பேசி இருந்தார். அப்போது, ஏன்? என்னுடைய போட்டோவிற்கு யாருமே எந்த ரிப்ளையும் பண்ணவில்லை என்று வருத்தப்பட்டு பேச எல்லோருமே அவருக்கு மெசேஜ் அனுப்பினார்கள். தன்னுடைய மாமனார் அனுப்பிய மெசேஜை கேட்டு தங்கமயில் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதை பார்த்து கோமதி புலம்பி இருந்தார். உடனே பாண்டியன், வீடியோ கால் செய்து கோமதியை சமாதானம் செய்தார். கோமதியும் பாண்டியன் பேச்சால் உருகி அன்பாக பேசி இருந்தார். இதையெல்லாம் ராஜீ- மீனா இருவருமே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சரவணன் புது சட்டையில் வெயிட்டர் சட்னி ஊத்தியதால் தங்கமயில் கத்தி சண்டை போட்டார். ஒருவழியாக சரவணன் அவரை சமாதானம் செய்தார். இதை எல்லாம் சரவணன் தன்னுடைய அப்பாவிடம் சொல்ல, அவர் பெருமையாக தங்க மயிலை பற்றி பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில், தன் அண்ணன் வீட்டிற்கு வந்ததை பார்த்து ராஜி அம்மா வடிவு அதிர்ச்சி ஆகி இருந்தார். இவரை நயவஞ்சகமாக பேசி அழைத்து வந்ததே ராஜியின் சித்தப்பா தான். பின் நகை விஷயம் தெரிந்து விடுமோ என்று பெண்கள் எல்லோரும் பயப்பட, ராஜி சித்தப்பா, உங்களுக்கு கஷ்டம் என்று எங்களிடம் கேட்டால் பணத்தை கொடுப்போம். நீங்கள் எதற்காக அன்னி நகை வாங்கினீர்கள்? என்று சொன்னவுடன், நான் எதற்கு என் தங்கைக்கு போட்ட நகையை வாங்க போறேன்? என்று கோபமாக பேசி விட்டு சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:
கடைசியில் உண்மை அறிய ராஜியின் அப்பா, எங்கே நகை? என்ன செய்தாய்? என்று கேட்க எதுவுமே பேசாமல் அமைதியாக வடிவு நிற்கிறார். உண்மையை சொல்லும் வரை இந்த வீட்டில் தண்ணி, சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ராஜு- கதிர் இருவரும் கோச்சிங் சென்டர் பத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், சரவணன் தூங்கிக் கொண்டிருக்க தங்கமயில் தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்து சரவணனை புகழ்ந்து பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் சரவணன் கேட்டு ரொம்ப சந்தோஷப்படுகிறார். மறுநாள் இருவரும் தயாராகி சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எல்லாம் ஃபேமிலி குரூப்பில் போடுகிறார்கள். அப்போது தங்கமயில் குட்மார்னிங் மெசேஜ் உடன் வேறு ஏதோ மெசேஜை அனுப்பி விடுகிறார். கடைசியில் வடிவு எதையுமே சாப்பிடாமல் அமைதியாக இருப்பதாய் பார்த்து வீட்டில் உள்ள பெண்கள் வருத்தப்படுகிறார். ஆனால், ராஜியின் அப்பா கண்டு கொள்ளவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.






