விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியம், மாப்பிள்ளை என்ன சொன்னார் என்றார். தங்கமயில், யாரிடமும் என் குழந்தை விஷயத்தை பற்றி சொல்லப்போவதில்லை. என் குழந்தையை நானே வளர்க்கிறேன். யாரும் எனக்கு தேவையில்லை. இதுவரை நீ எனக்கு செய்ததெல்லாம் போதும் என்று தன்னுடைய அம்மாவை எதிர்த்து பேசி இருந்தார். பாக்கியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் மீனாவிடம் பாக்கியம் விசாரித்தார். அப்போது மீனா, சரவணன் மாமா இந்த குழந்தைக்கு அப்பா யார்? என்று கேட்டு விட்டார். அதனால் அக்கா உடைந்து போய் இருக்கிறார் என்றார். கோபத்தில் பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு சண்டை போட கிளம்பினார்.

உடனே மீனா தடுத்து நிறுத்தி அக்காவின் முடிவுக்கு மதிப்பு கொடுங்கள். அவருடைய வாழ்க்கையை பார்க்க விடுங்கள் என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் சரவணன், அஞ்சலி இடம் தங்கமயில் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். அஞ்சலி, நீ பேசியது தவறு என்று அட்வைஸ் செய்தார். பின் தங்கமயில் மாத்திரை இல்லை என்று கடைவீதிக்கு வந்தார். அப்போது ஒரு கடையில் சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆனார். அஞ்சலி, சரவணனை தொட்டு தொட்டு பேசுவதை பார்த்து தங்கமயில் உடைந்து போய் இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
வீட்டிற்கு வந்த தங்கமயில், சரவணன் அஞ்சலியுடன் சேர்ந்திருப்பதை நினைத்து ரொம்ப எமோஷனாக அழுதார். தன்னுடைய அம்மா கேட்டுமே மயில் எந்த உண்மையையும் சொல்லவில்லை. பின் பாண்டியன் போடுவதற்கு சட்டை இல்லை என்று வீட்டில் அலப்பறை செய்து கொண்டிருந்தார். கோமதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பாண்டியன் அவருடைய வேலையை செய்தார். காந்திமதி எவ்வளவு சொல்லியுமே கோமதி கேட்கவில்லை. பின் பாண்டியன் தன்னுடைய துணிகளை எல்லாம் துவைத்து போட்டு விட்டு கடைக்கு சென்றார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் செந்திலுக்கு போன் செய்த மீனாவின் அப்பா, தனக்கு தெரிந்த ஒருவருக்கு டாக்குமென்ட்டை சரியாக முடித்து தந்தால் பணம் தருவதாக சொன்னார். செந்திலுக்கு பதட்டமாக இருக்கிறது. இருந்தாலும் மீனாவின் அப்பா சொன்னதால் அந்த வேலையை செய்து முடிக்க செந்தில் ஒத்துக்கொண்டார். செந்தில் தன்னுடைய உயர் அதிகாரியிடம் அவரை அழைத்துச் சென்று பேசி டீலிங் முடிகிறார்.
https://www.youtube.com/watch?v=_d87FrAU9VY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ராஜி, எனக்கு சின்ன வயதிலிருந்தே போலீசாக வேண்டும் என்று ஆசை என்கிறார். கதிர், அதற்காக நீ என்ன செய்தாய்? என்கிறார். அடுத்த நாள் விடிகாலையில் ராஜி எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். கதிர், ராஜியை தேடிப் போகிறார். அங்கு ராஜி கடினமாக ஓடிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து கதிர் அவருக்கு சப்போர்ட் செய்கிறார்.






