விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி கடினமாக உழைத்துக் கொண்டிருப்பதை பார்த்து கதிருக்கு பெருமையாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மீனாவை பார்த்து மயில், சரவணன் மாமா வேற ஒரு பெண்ணுடன் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். என்னுடைய நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாக உடைந்து விட்டது என்றெல்லாம் சொல்லி அழுதார். மீனா ஆறுதல் சொன்னார். பின் மயில் கிளம்பி வேலைக்கு சென்றார். அந்த சமயம் வந்த செந்தில், மீனாவிடம் பேசி இருந்தார். மீனா, சரவணன் மீது இருந்த கோபத்தை செந்தில் இடம் காண்பித்து விட்டு சென்றார்.

கோமதி, பாண்டியன் இடம் கோவப்பட்டு கொண்டிருப்பதால் காந்திமதி அறிவுரை சொன்னார். கோமதி, எத்தனை வருடமானாலும் அவராக வந்து பேசும் வரை நான் அவரிடம் பேசமாட்டேன். இனி எதுவும் அவருக்காக செய்யமாட்டேன் என்றார். காந்திமதி, தன் மகளின் வாழ்க்கை நினைத்து கவலைப்பட்டார். இன்னொரு பக்கம் மீனாவும் அவருடைய தோழியும் தங்கமயிலின் நிலைமையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோழி, மாமனார் குடும்பத்தில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி புரியவை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மயிலுக்காக இல்லை என்றாலும் அவருடைய குழந்தைக்காகவாவது வீட்டில் உண்மையை சொல் என்றார்.
மீனாவும் சரி என்றார். அதற்கு பின் வீட்டில் ராஜி, காந்திமதி, கோமதி, அரசி, மீனா எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, மயில் தான் இந்த வீட்டின் முதல் வாரிசை பெற்றெடுப்பார் என்று சொன்னவுடன் கோமதி பயங்கரமாக கொந்தளித்தார். பின் மீனாவையும் திட்டினார். மீனா, நாளைக்கு தங்கமயிலை வரவைத்து உண்மையை சொல்லிவிடலாம் என்று மனதிற்குள் சொன்னார். இன்னொரு பக்கம் ஆபீஸில் செந்தில், மீனாவின் அப்பா சொன்னதால் லஞ்சம் வாங்கினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் செந்தில், பணத்தை எடுத்து உள்ளே வைத்துக் கொள்கிறார். இருந்தாலும் செந்திலுக்கு கை எல்லாம் ரொம்பவே நடுங்குகிறது. பின் அந்த புரோக்கர், இதே மாதிரி எந்த வேலையாக இருந்தாலும் நான் உங்களிடம் கொண்டு வருகிறேன். எனக்கும் பார்த்து செய்யுங்கள் என்று சொல்கிறார். செந்திலுக்கு ரொம்பவே பதட்டமாக இருக்கிறது. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயத்தைப் பற்றி மீனாவிடம் எதுவும் சொல்லாமல் பணத்தை மறைத்து வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது வீட்டிற்கு மீனாவின் அப்பா ரவி, அம்மா எல்லோருமே வந்துவிடுகிறார்கள். ரவி, எதற்கு பயப்படுகிறீர்கள்? தைரியமாகிருங்கள். இதெல்லாம் ஒரு தப்பு கிடையாது. நடைமுறையில் நடக்கும் விஷயம் தான் என்றெல்லாம் சொல்லி செந்திலை சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் ராஜி தன்னுடைய போலீஸ் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். கதிரும் அவருக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






