விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், தன் வீட்டில் நடந்ததை எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார். பின் ராஜி படிப்பு விஷயத்தை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், செந்தில் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொன்னார். அப்போது மீனாவின் அம்மா போன் செய்து கண்ட மேனிக்கு திட்டுகிறார். அதற்குப்பின் மீனாவின் அப்பா, நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டாமா? லஞ்சம் வாங்குவது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று செந்திலுக்கு தப்பு தப்பாக சொல்லிக் கொடுத்தார். மறுநாள் காலையில் செந்தில் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா, தங்கமயிலை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

மீனா, தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்லி அவருடைய அம்மா வீட்டுக்கு அழைத்து சென்றார். தங்கமயிலை பார்த்தவுடன் பாக்கியம் பயங்கரமாக கொந்தளித்து வழக்கம் போல கத்தினார். மீனா எவ்வளவோ சமாதானம் செய்தார். இருந்தாலும் பாக்கியம் மோசமான வார்த்தைகளால் தங்கமயிலை திட்டிக் கொண்டிருந்தார். பின் ரூமிற்கு அழைத்துச் சென்ற மீனா, தங்க மயிலுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தவறான முடிவெடுக்க கூடாது என்று அறிவுரை சொன்னார். அப்போது தங்கமயில், எனக்கு வேலை ஏதாவது வாங்கி தர முடியுமா? இந்த உதவி மட்டும் செய் என்றார். மீனாவும் சம்மதித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் மீனா, அக்காவிடம் யாரும் மோசமாக பேசாதீர்கள். அவர் தற்கொலை முடிவுக்கு சென்றார்கள் என்றார். இருந்தாலும் பாக்கியம், தங்கமயிலை தான் திட்டிக் கொண்டிருந்தார். மீனா, தங்கமயிலுக்கு தைரியம் கொடுத்துவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் கதிர், ராஜிக்கு பீஸ் கட்டி கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டார். இன்னொரு பக்கம் முத்துவேல், குமாருக்கு நான் நல்ல பெண் பார்த்துவிட்டேன். நல்ல சம்மந்தம். சீக்கிரத்தில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லாருமே சந்தோஷப்பட்டார்கள். அதுக்கு பின் செந்திலை சந்தித்த மீனா நடந்ததை எல்லாம் சொன்னார். இருந்தாலும் செந்தில், தங்கமயில் விஷயத்தில் தலையிடாதே என்று அறிவுரை சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், மீனா இருவரும் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது கோமதி, கதிர் லட்ச கணக்கில் செலவு செய்து ராஜிக்கு பீஸ் கட்டிய விஷயத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா, தங்கமயில் பெயரை எடுத்தவுடன் கோமதி கோபப்படுகிறார். இதனால் செந்தில், மீனாவை திட்டி அமைதியாக இருக்க சொல்கிறார். அதற்குப்பின் மீனா, ராஜியை பார்த்து பேசுகிறார். அப்போது ராஜி, கதிர் தனக்காக செய்த விஷயங்களும், தாங்கள் கணவன்- மனைவியாக வாழ தொடங்கிய விஷயத்தைப் பற்றி எல்லாம் சொல்கிறார். இதனால் மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் கிச்சனில் இதை பற்றி மீனா, கோமதியிடம் சொல்ல, ராஜி வெட்கப்படுகிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் தன்னுடைய தோழிகளுக்கு போன் செய்து வேலை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். பாக்கியம் வழக்கம் போல தங்கமயிலை திட்டியும் கடுமையாக பேசிக் கொண்டும் இருக்கிறார். இருந்தாலும் தங்கமயில் மணமுடையாமல் வேலை தேடி போன் செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் போன் செய்த அஞ்சலி, தங்கமயிலை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். உடனே சரவணன், தங்கமயில் ஏமாற்றிய விஷயம், கோர்ட்டில் விவாகரத்து நடக்கும் விஷயம் என எல்லாத்தையும் சொல்லி விடுகிறார். இதனால் அஞ்சலி ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






