விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், எதற்காக கோயிலுக்கு போனாய் என்று கேட்டார். சரவணன், அம்மாவின் மீது இருக்கும் கோபம் குறைய வேண்டும் என்று போனேன் என்றார். பின் பாண்டியன், சரவணனை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் ரூமில் ராஜி, கதிருக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது ரூமிற்கு வந்த கதிர், ராஜிக்காக மல்லிகைப்பூ வாங்கி வந்து தலையில் வைத்து விட்டார். இதெல்லாம் பார்த்து ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

அஞ்சலி, சரவணனுக்கு மெசேஜ் போட்டார். உடனே சரவணன், அஞ்சலிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது அஞ்சலி, தனக்கு திருமணமாகி விவாகரத்தான விஷயத்தைப் பற்றி எல்லாம் சொல்லினார். இதைக் கேட்டு சரவணனுக்கு கஷ்டமாக இருக்கிறது. அஞ்சலி, சரவணன் வாழ்க்கையை பற்றி கேட்டார். சரவணன் எதுவும் சொல்லாமல் வேலை இருக்கிறது என்று போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் செந்தில் வீட்டிலேயே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மீனா கண்டித்துமே செந்தில் கேட்கவில்லை. அப்போது செந்தில், வீட்டில் யாருமே தங்கமயிலிடம் பேசாத போது நீ எதற்காக பேசினாய்? நகை விஷயத்தை எதற்காக மறைத்தாய்? கதிர் திருமணத்தை எதற்கு சொல்லவில்லை? என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் மீனாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் விவாகரத்து கேஸ் நடப்பதால் பாக்கியம் கோர்ட்டில் விவாகரத்து வேண்டாம் என்று உறுதியாக இரு. எப்படியாவது உன் மாமியார் வீட்டுக்குள் போ. மீண்டும் இந்த வீட்டிற்கு வராதே என்று தங்கமயிலை திட்டினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் கோர்ட்டுக்கு போகணும் என்று சொல்கிறார். பாண்டியன், எனக்கு கடையில் வேலை அதிகமாக இருக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை என்கிறார். உடனே கோமதி, நான் கோர்ட்டுக்கு போகிறேன் என்கிறார். அதற்குப்பின் கோமதி, சரவணன் இருவரும் கிளம்பி கோர்ட்டுக்கு சென்று விடுகிறார்கள். அங்கு செந்திலும் வந்து விடுகிறார். பின் வக்கீல் இடம் கோமதி, விவாகரத்து வாங்கி கொடுங்கள்.

சீரியல் ட்ராக்:
என் மகன் ரொம்ப கஷ்டப்படுகிறான் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் குடும்பம் கோர்ட்டுக்கு வருகிறது. பின் கோர்ட்டில் நீதிபதி, இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரிக்கிறார்.
தங்கமயில் சார்பில், சரவணன் குடும்பத்தின் மீது பொய்யான புகார்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சரவணன், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். எனக்கு மயிலுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். தங்கமயில் கோர்ட்டிலேயே விவாகரத்து வேண்டாம் என்று கதறி அழுகிறார். உடனே நீதிபதி, இன்னொரு ஒரு தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து விடுகிறார்.






