விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில்- மீனா இருவரும் ரூமுக்குள் சென்று விட்டார்கள். பாக்கியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. தங்கமயில் ரொம்பவே எமோஷனலாக அழுதார். பின் அவர், என்னுடைய குழந்தைக்கு அப்பா யார் என்று கேட்டார். இனிமேல் நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. நான் தனியாகவே வாழ்கிறேன். குழந்தையை என்னால் தனியாக வளர்க்க முடியும். எத்தனையோ பேர் குழந்தையை வளர்த்து இருந்தார்கள். எனக்கு அவர் வேண்டாம், என்னால் இனி தனியாக வாழ முடியும் என்று முடிவெடுத்தார்.

பாக்கியம், மாப்பிள்ளை என்ன சொன்னார் என்றார். தங்கமயில், யாரிடமும் என் குழந்தை விஷயத்தை பற்றி சொல்லப்போவதில்லை. என் குழந்தையை நானே வளர்க்கிறேன். யாரும் எனக்கு தேவையில்லை. இதுவரை நீ எனக்கு செய்ததெல்லாம் போதும் என்று தன்னுடைய அம்மாவை எதிர்த்து பேசி இருந்தார். பாக்கியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் மீனாவிடம் பாக்கியம் விசாரித்தார். அப்போது மீனா, சரவணன் மாமா இந்த குழந்தைக்கு அப்பா யார்? என்று கேட்டு விட்டார். அதனால் அக்கா உடைந்து போய் இருக்கிறார் என்றார். கோபத்தில் பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு சண்டை போட கிளம்பினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே மீனா தடுத்து நிறுத்தி அக்காவின் முடிவுக்கு மதிப்பு கொடுங்கள். அவருடைய வாழ்க்கையை பார்க்க விடுங்கள் என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் சரவணன், அஞ்சலி இடம் தங்கமயில் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். அஞ்சலி, நீ பேசியது தவறு என்று அட்வைஸ் செய்தார். பின் தங்கமயில் மாத்திரை இல்லை என்று கடைவீதிக்கு வந்தார். அப்போது ஒரு கடையில் சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆனார். அஞ்சலி, சரவணனை தொட்டு தொட்டு பேசுவதை பார்த்து தங்கமயில் உடைந்து போய் இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த தங்கமயில், சரவணன் அஞ்சலியுடன் சேர்ந்திருப்பதை நினைத்து ரொம்ப எமோஷனாக அழுகிறார். தன்னுடைய அம்மா கேட்டுமே மயில் எந்த உண்மையையும் சொல்லவில்லை. பின் பாண்டியன் போடுவதற்கு சட்டை இல்லை என்று வீட்டில் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். கோமதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பாண்டியன் அவருடைய வேலையை செய்கிறார். காந்திமதி எவ்வளவு சொல்லியுமே கோமதி கேட்கவில்லை. பின் பாண்டியன் தன்னுடைய துணிகளை எல்லாம் துவைத்து போட்டு விட்டு கடைக்கு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் செந்திலுக்கு போன் செய்த மீனாவின் அப்பா, தனக்கு தெரிந்த ஒருவருக்கு டாக்குமென்ட்டை சரியாக முடித்து தந்தால் பணம் தருவதாக சொல்கிறார். செந்திலுக்கு பதட்டமாக இருக்கிறது. இருந்தாலும் மீனாவின் அப்பா சொன்னதால் அந்த வேலையை செய்து முடிக்க செந்தில் ஒத்துக்கொள்கிறார். செந்தில் தன்னுடைய உயர் அதிகாரியிடம் அவரை அழைத்துச் சென்று பேசி டீலிங் முடிகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






