விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன், குமாரின் சட்டையை பிடித்து சண்டை போட்டார். அரசி, என்ன சொல்வது என்று புரியாமல் கதறி அழுதார். குமார், நானும் அரசியும் காதலிக்கிறோம் என்றவுடன் கோபம் தாங்க முடியாமல் சரவணன் குமாரை அடித்தார். தியேட்டர் முன்பு கலவரமே வெடிக்கிறது. அதற்கு பின் சரவணன், அரசியை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது வரும் வழியில் செந்திலுக்கு போன் செய்து அப்பாவை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வா என்று சரவணன் சொன்னார்.

பின் ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சரவணன், என்ன வேலை செய்திருக்கிறாய்? இதுதான் நீ படிக்க போகும் லட்சணமா? என்று ஆவேசப்பட்டு கத்தி இருந்தார். சரவணன் எல்லோருக்கும் போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். பின் வீட்டில் எல்லோருமே என்ன பிரச்சனை? எதற்காக வரவைத்தான்? என்று புரியாமல் குழம்பி போயிருந்தார்கள். அப்போது சரவணன், அரசியை அழைத்து வந்தவுடன் எல்லோருமே, என்ன ஆனது? என்ன பிரச்சனை? என்று கேட்டார்கள். உடனே சரவணன், அரசி ஒருவரை காதலிக்கிறார். தியேட்டரில் அவர் காதலருடன் கைகோர்த்து சிரித்து பேசி வருகிறான் என்றவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோபத்தில் கோமதி, சரவணன் அடித்தார். சரவணன், நான் சொல்வது தான் உண்மை. அவள் காதலிப்பது வேறு யாரும் இல்லை குமரவேல் என்று சொன்னவுடன் எல்லோக்கும் மீண்டும் பேரதிர்ச்சி ஆகி இருந்தது. பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. செந்தில், கதிர், பழனி எல்லோருமே அரசியை பயங்கரமாக திட்டி இருந்தார்கள். பின் அரசி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டார். என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் பாண்டியன் மயங்கி விழுதார் மொத்த குடும்பமே பதறி போனது. நேற்று பாண்டியன், அதிர்ச்சியில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்:
அரசி தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டார். கோபத்தின் உச்சிற்க்கு சென்ற கோமதி, அரசியை பயங்கரமாக வெளுத்து வாங்கினார். மருமகள் எல்லோருமே கோமதியை தடுத்தும் அவரால் ஆத்திரம் தாங்க முடியாமல் அரசியை அடித்தார். அதற்குப் பின் அரசின் மொபைலை எடுத்து செக் பண்ணி இருந்தார்கள். அப்போது குமார் கொடுத்த பரிசு பொருட்களை வீட்டில் கோமதி ஆராய்ந்தார். கிரீட்டிங் கார்டு, மோதிரம், செயின் எல்லாத்தையும் பார்த்துவிட்டு இன்னும் கோமதி கோபப்பட்டார். உடனே அவர், கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டு அரசியை அடித்தார். அரசி எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீடு சோகத்தின் கடலில் மூழ்கி இருக்கிறது. கோமதி வேதனை தாங்க முடியாமல் அரிசியை திட்டிக் கொண்டிருக்கிறார். சுகன்யா, எதுவும் சம்மந்தம் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். கோபத்தில் பழனி, குமார் வீட்டிற்கு சென்று சண்டை போடுகிறார். பின் ராஜி அப்பா வீட்டில், குமார்- அரசி காதலிக்கும் விஷயத்தைச் சொன்னவுடன் மொத்த பேருமே ஷாக் ஆகிறார்கள். உடனே சக்தி, மொத்த சொத்தையும் ஆட்டைய போடுவதற்கு இந்த வேலையை உன் தங்கை செய்தாளா? என்று மோசமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் ஆவேசத்தில் செந்தில்- கதிர், குமாரையும் அவருடைய அப்பாவையும் அடிக்கப் போகிறார்கள். பயங்கர கலவரம் ஆகிறது. பின் வீட்டில் உள்ளவர்கள் சண்டையை தடுத்துவிடுகிறார்கள். பின் பழனி, குமாருக்கு சொல்லி வையுங்கள். இனிமேல் அரசி பக்கம் வரவே கூடாது என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் அரசி, தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு அழுது புலம்புகிறார். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசாமல் நிலை குலைந்து இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






