விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, அரசி இடம் குமாரை திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசி இருந்தார். பயந்துபோன அரசி, இது என் அப்பாவிற்கு தெரிந்தால் கொன்னு போட்டு விடுவார். குமாரை திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத விஷயம் என்று சொன்னார். அதற்குப்பின் மீனா-செந்தில் இருவரும் சந்தோஷமாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டார்கள். அந்த சமயம் பார்த்து தங்கமயில் போன் செய்தார். செந்திலுக்கு தெரியாமல் மீனா போன் பேசி இருந்தார்.

அப்போது தங்கமயில், மீனாவிடம் மன்னிப்பு கேட்டு என்னுடைய குழந்தைக்காக நான் யாரிடமும் நிற்கவில்லை என்று எமோஷனலாக பேசி இருந்தார். கோமதி, மீனாவும் நானும் சேர்ந்து கோயிலுக்கு போகிறோம். நாங்கள் வருவதற்கு இரவு ஆகிவிடும். பிள்ளைகளிடம் சொல்லிவிடு. அவர் கேட்டால் மட்டும் சொல். இல்லை என்று சொல்லாதே என்றார். காந்திமதியும் சரி என்றார். அதற்கு பின் கோமதி கிளம்பி சென்று விட்டார். ஆனால், கோமதி ஃபோனை வீட்டிலே விட்டு சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் கோமதியின் போனை பார்த்து காந்திமதி, பாண்டியன்- கோமதி இருவரையும் சேர்த்து வைக்க திட்டம் போட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் காந்திமதி, கோமதி எங்கே என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது என்று நாடகம் ஆடினார். ராஜி, அரசி, கதிர் எல்லோருமே தன் அம்மாவிற்கு போன் செய்தார்கள். ஆனால், கோமதி போன் சைலண்டில் போட்டு காந்திமதி மறைத்து வைத்து விட்டார். இன்னொரு பக்கம் மீனாவுடன் சேர்ந்து கோமதி கோயிலுக்கு சென்று இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காந்திமதி, கோமதி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எங்கே போனால் என்று தெரியவில்லை. எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்று அழுது டிராமா போட்டுக் கொண்டிருக்கிறார். கோமதி காணாமல் போன விஷயத்தைப் பற்றி அரசி- கதிர் இருவரும் செந்தில், சரவணனுக்கு சொல்கிறார்கள். பின் பாண்டியனுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
காந்திமதி அழுது டிராமா செய்து கொண்டிருக்கிறார். கதிர்- செந்தில் இருவரும் தங்களுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடி விட்டு வருகிறார்கள். ஆனால், கோமதி இல்லை. பின் வீட்டிற்கு வந்த செந்தில், கதிர் இருவரும் பாண்டியனை பார்த்து, உங்களால்தான் அம்மா வீட்டை விட்டு போய்விட்டார். இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது என்று தன்னுடைய அப்பா என்று கூட பார்க்காமல் ரொம்ப மோசமாக பேசுகிறார்கள். சரவணன் தடுத்துமே கேட்கவில்லை. செந்தில்- கதிர் இருவரும் தங்கள் மனதில் இருந்த ஆங்கத்தை எல்லாம் கொட்டி தீர்க்கிறார்கள். பாண்டியன் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்.






