விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், திருமணத்தை நிறுத்த சொன்னது யார்? என்ற காரணத்தை கேட்டார். அவர் முதலில் தயங்கினாலும் சக்திவேல் கொஞ்சம் ஓவராக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பெண் வீட்டார், உன்னுடைய அம்மா தான் திருமணத்தை நிறுத்த சொன்னார் என்றார். பின் வீட்டிற்கு வந்த சக்திவேல், ருத்ர தாண்டவம் ஆடினார். திருமணத்தை எதற்காக நிறுத்த சொன்னீர்கள் என்றெல்லாம் காந்திமதியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள்.

காந்திமதி, நான் தான் நிச்சயதார்த்த திருமணத்தை நிறுத்தினேன் என்று உண்மையை ஒத்துக் கொண்டார். இதனால் கொந்தளித்த சக்திவேல், எங்கள் வீட்டில் தின்னுட்டு எங்களுக்கு துரோகம் செய்கிறாயா, இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி காந்திமதியின் கையை பிடித்து தர தர தரவென்று இழுத்து வெளியே கொண்டு வந்து விட்டார். தன் அம்மா வீட்டில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று கோமதி வெளியே போனார். அப்போது சக்திவேல், தன்னுடைய அம்மாவை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட கோமதி, தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சக்திவேல், பாண்டியன் குடும்பத்தையும் ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். ராஜி, பழனி, கதிர் எல்லோரும் சொல்லியுமே சக்திவேல் கேட்கவில்லை. காந்திமதியை வீட்டுக்குள் விட முடியாது என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார். அப்போது கோமதி, தன்னுடைய அம்மாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். பாண்டியன் எதுவுமே சொல்லவில்லை. பின் காந்திமதி தன் பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருந்தார். அப்போது கோமதி, எதற்காக திருமணத்தை நிறுத்தினீர்கள்? என்றார். காந்திமதியும் ஏதேதோ காரணத்தை சொல்லி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்று எபிசோட்டில் தங்கமயில், வேலை செய்யும் இடத்தில் வாந்தி எடுத்துக்கொண்டு முடியாமல் இருக்கிறார். இதை பற்றி மீனாவிற்கு அவருடைய தோழி சொல்கிறார். பின் வீட்டிற்கு வந்த மீனா, தங்கமயிலை ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறார். அங்கு தங்கமயிலை செக் பண்ணிய டாக்டர், நீங்கள் ரெண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். தங்க மயில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மீனாவும், தங்கமயில் கர்ப்பமானதால் சந்தோஷப்படுகிறார். பின் தங்கமயிலை அழைத்துக் கொண்டு பாக்கியம் வீட்டிற்கு மீனா போகிறார்.

சீரியல் ட்ராக்:
அங்கு மீனா எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். பாக்கியம் கோபமாகவே இருக்கிறார். அப்போது தங்கமயில், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதனால் பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு பிரச்சினை செய்ய கிளம்புகிறார். உடனே தடுத்து நிறுத்திய மீனா, முதலில் சரவணன் மாமாவிடம் அக்கா சொல்லட்டும். அதற்கு பிறகு வீட்டில் எல்லோரிடமும் சொல்லலாம் என்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் அப்பா, செந்திலை புது வீடு வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். செந்தில், மீனாவின் அப்பா சொன்னதால் அமைதியாக ஒத்துக் கொள்கிறார்.






