விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, நீங்கள் எல்லோருமே நன்றாக இருக்கணும் என்று நான் வேண்டிக் கொள்வேன். என்னை கட்டாயப்படுத்தாதே என்று சொல்லி விட்டார். இதனால் முத்துவேல் அமைதியாக சென்று விட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை கோயிலுக்கு வர வைத்து பேசி இருந்தார். அப்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தங்கமயில் சொன்னார். இதைக் கேட்டவுடன் சரவணன் ரொம்ப சந்தோஷப்பட்டு தங்கமயிலை தூக்கி சுத்தினார். கடைசியில் அது தங்கமயில் கண்ட கனவு. கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்தவுடன் சரவணன் ஏற்றுக் கொள்வார் என்று ரொம்ப சந்தோஷத்தில் தங்கமயில் இருந்தார்.

மீனா- செந்தில் இருவரும் வேலைக்கு தயாராகி கிளம்பினார்கள். இருவருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து மயில் போன் செய்தார். மீனா வேறொரு பெயரில் தான் நம்பரை சேவ் பண்ணி வைத்திருந்ததார். செந்திலுக்கு அது தெரியவில்லை. பின் மீனா, சரவணனுக்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன்- கோமதி இருவரும் பேசிக்கொள்ளாததை காந்திமதி கவனித்து விசாரித்தார். ஏதேதோ சொல்லி கோமதியும் சமாளித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் சரவணன் கோயிலுக்கு வந்து விட்டார். தங்கமயில் ரொம்ப சந்தோசமாக தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார். சரவணன் நம்பாமல் தங்கமயிலை திட்டிக் கொண்டிருந்தார். பின் ஒரு கட்டத்தில் தங்கமயில் தன்னுடைய ரிப்போர்ட்டை எல்லாம் காண்பித்தார். உடனே சரவணன், இந்த குழந்தைக்கு அப்பா யார்? நீ கர்ப்பமாக இருந்தாலுமே இது என் குழந்தை இல்லை என்று ரொம்ப மோசமாக பேசி விட்டார். சரவணன் சொன்ன வார்த்தையை கேட்டு தங்கமயில் உடைந்து போய் நிற்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் கோயிலை விட்டு வெளியே வந்த சரவணன், மீனாவை பார்த்து கோபப்படுகிறார். மயில் உடன் நீயும் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறாயா? தயவு செய்து எதுவும் பேசாதே என்று அங்கிருந்து கிளம்புகிறார். பின் கோயிலுக்குள் சென்ற மீனா, தங்கமயில் இடம் விசாரிக்கிறார். தங்கமயில் ரொம்ப வேதனையாக அழுது கொண்டிருக்கிறார். மீனா, அத்தை மாமாவிடம் பேசலாம் என்கிறார். தங்கமயில் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருவரும் வீட்டிற்கு கிளம்பி வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பாக்கியம், மாப்பிள்ளை தங்க மயிலை வீட்டிற்கு அழைத்து செல்வார் என்று ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த தங்கமயில்- மீனா இருவரும் ரூமுக்குள் சென்று விடுகிறார்கள். பாக்கியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. தங்கமயில் ரொம்பவே எமோஷனலாக அழுகிறார். பின் அவர், என்னுடைய குழந்தைக்கு அப்பா யார் என்று கேட்கிறார். இனிமேல் நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. நான் தனியாகவே வாழ்கிறேன். குழந்தையை என்னால் தனியாக வளர்க்க முடியும். எத்தனையோ பேர் குழந்தையை வளர்த்து இருக்கிறார்கள். எனக்கு அவர் வேண்டாம், என்னால் இனி தனியாக வாழ முடியும் என்று முடிவெடுக்கிறார்.






