விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், வீட்டில் யாருமே தங்கமயிலிடம் பேசாத போது நீ எதற்காக பேசினாய்? நகை விஷயத்தை எதற்காக மறைத்தாய்? கதிர் திருமணத்தை எதற்கு சொல்லவில்லை? என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் மீனாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் விவாகரத்து கேஸ் நடப்பதால் பாக்கியம் கோர்ட்டில் விவாகரத்து வேண்டாம் என்று உறுதியாக இரு. எப்படியாவது உன் மாமியார் வீட்டுக்குள் போ. மீண்டும் இந்த வீட்டிற்கு வராதே என்று தங்கமயிலை திட்டினார்.

சரவணன் கோர்ட்டுக்கு போகணும் என்று சொன்னார். பாண்டியன், எனக்கு கடையில் வேலை அதிகமாக இருக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை என்றார். உடனே கோமதி, நான் கோர்ட்டுக்கு போகிறேன் என்றார். அதற்குப்பின் கோமதி, சரவணன் இருவரும் கிளம்பி கோர்ட்டுக்கு சென்று விட்டார்கள். அங்கு செந்திலும் வந்து விட்டார். பின் வக்கீல் இடம் கோமதி, விவாகரத்து வாங்கி கொடுங்கள். என் மகன் ரொம்ப கஷ்டப்படுகிறான் என்று பேசிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த சமயம் பார்த்து தங்கமயில் குடும்பம் கோர்ட்டுக்கு வந்தார்கள். பின் கோர்ட்டில் நீதிபதி, இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்தார். தங்கமயில் சார்பில், சரவணன் குடும்பத்தின் மீது பொய்யான புகார்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். சரவணன், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். எனக்கு மயிலுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். தங்கமயில் கோர்ட்டிலேயே விவாகரத்து வேண்டாம் என்று கதறி அழுதார். உடனே நீதிபதி, இன்னொரு ஒரு தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் தங்கமயில், தயவு செய்து விவாகரத்து இருக்க வேண்டாம். நாம் சேர்ந்து வாழலாம் என்று கதறி அழுகிறார். சரவணன், உன்னை விட்டு பிரிந்தால் தான் எனக்கு நிம்மதி. என்னை நிம்மதியாக வாழவிடு என்று கோபப்படுகிறார். அப்போது வந்த கோமதி, என் மகனை விட்டுவிடு. அவனுக்கு விவாகரத்து கொடுத்துவிடு என்று சொல்கிறார். இதனால் பாக்கியம் கோபப்பட்டு பேசுகிறார். அதற்குப்பின் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் அரசி வீட்டில் தனியாக இருக்கிறார். அப்போது மனம் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பாண்டியன் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறார். அவரை பார்த்துவிட்டு அரசி பயந்து போய் கத்துகிறார். அரசி சத்தத்தை கேட்டு அப்பத்தா, குமார் இருவரும் வருகிறார்கள். பின் அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை குமார் துரத்திவிட்டு அரசியை சமாதானம் செய்கிறார். அதற்குப்பின் சரவணன், அஞ்சலியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கோமதி பாண்டியனுக்கு சாப்பாடு பரிமாறுகிறார். பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். கோமதி கோர்ட்டில் நடந்தது எல்லாம் சொல்லி சரவணன் வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.






