விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தன் மகன் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்தவுடன் சந்தோஷத்தில் பாண்டியன் மொட்டை மாடியில் சரக்கு அடித்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த ராஜி, யார் என்ன சொல்லி இருந்தாலும் நீங்கள் கதிர் மீது சந்தேகப்பட்டு இருக்க கூடாது. அவன் ரொம்ப நல்லவன். அவனை மட்டும் ஏன் நீங்கள் பாசமாக நடத்த மாட்டுகிறீர்கள். ஆனால், அவன் உங்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறான் என்று தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டி இருந்தார். இதை எல்லாம் கேட்டு பாண்டியன் வருத்தப்பட்டார்.

அதற்குப்பின் கீழே வந்த பாண்டியன், உனக்கு என்ன வேண்டும் என்று கேளு. நான் செய்கிறேன் என்றார். உடனே கதிர், ராஜி போலீசாக வேண்டும். அதற்கு சம்மதம் கொடுங்கள் என்று சொன்னவுடன் வழக்கம்போல் பாண்டியன் கோபப்பட்டு திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சுகன்யா- பழனி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுகன்யா, என்னால் இந்த வீட்டில் இருக்க முடியவில்லை என்று வழக்கம்போல அவரை திட்டிக் கொண்டிருந்தார். பழனிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. சுகன்யா அடுத்து என்ன பிரச்சனை செய்வாள் என்ற பயத்திலேயே பழனி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
நேற்று எபிசோட்டில் மீனாவின் அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அவரை பார்ப்பதற்காக கோமதி சென்றிருந்தார். அப்போது அவர், மீனாவின் அப்பாவிடமும் உடல் நலம் குறித்து அக்கறையுடன் பேசுவதை பார்த்து மீனாவின் அப்பா, அம்மா இருவருமே அவர்கள் மீது இருந்த கோபத்தை விட்டார்கள். அவர்களுமே கோமதியிடம் நன்றாக பேசினார்கள். அதுமட்டுமில்லாமல் மீனா அப்பா, செந்திலிடம் அக்கறையாக பேசி இருந்தார். இதை பார்த்து மீனாவிற்கு சந்தோசமாக இருந்தது. ஒரு வழியாக மீனாவின் அப்பா, செந்தில்-மீனா இருவரையும் ஏற்றுக்கொண்டார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் தன்னுடைய நண்பர்கள் வெளியே செல்வதற்கு அழைதார்கள். ஆனால், ராஜி பணம் இல்லை என்பதால் முடியாது என்றார். உடனே கதிர் தன்னுடைய அம்மாவிடம் பணத்தை வாங்கி ராஜிக்காக கொடுத்தார். இன்னொரு பக்கம் தங்கமயில் எங்கே செல்வது? என்று புரியாமல் அலைந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஹோட்டலில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று இருந்தது. அதை பார்த்தவுடன் தங்கமயில் உள்ளே சென்று வேலை கேட்டார். சப்ளையர் வேலை தான் இருக்கிறது என்ற உடன் தங்கமயிலும் ஒத்துக் கொண்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசி மட்டும் தனியாக நின்று போன் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்தவுடன் கோமதி திட்டிக் கொண்டிருக்கிறார். கடையில் பழனி வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது போன் செய்த சுகன்யா, சினிமாக்கு போகவில்லையா? என்று கேட்கிறார். அதற்கு பழனி, வேலை இருக்கிறது என்று ஏதோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால், சுகன்யா அவரை வறுத்து எடுக்கிறார். இது எல்லாம் பார்த்த செந்தில், தன்னுடைய அப்பாவிடம் பேசி எப்படியோ படம் பார்க்க அனுமதி வாங்கி தருகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் இதைப்பற்றி சுகன்யாவுடன் பழனி சொன்னவுடன் அவர் மீண்டும் அதுக்கும் சண்டை போடுகிறார்.
அதற்குபின் வீட்டிற்கு வந்த பாண்டியன் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசி போனை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் பார்த்து பாண்டியன் கேள்வி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். உடனே சுகன்யா, அரசி ரொம்ப நல்ல பொண்ணு. அவள் மீது சந்தேகப்பட வேண்டாம் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருக்கிறார். அதற்குப்பின் அரசி ரூமுக்கு போன சுகன்யா, நீ குமாரை காதலிக்கும் விஷயம் எனக்கு தெரியும். நான் உனக்காக துணையாக நிற்கிறேன். அவன் ரொம்ப நல்லவன். உன்னை அவனுக்கு பிடிக்கும் என்று அரசி மனசை மாற்றும் வகையில் பேசுகிறார். அரசியும் அதை நம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து மீனா உள்ளே வருகிறார். உடனே பேச்சை சுகன்யா மாத்தி விடுகிறார். இருந்தாலும் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.






