விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஷாப்பிங் போனார்கள். இதற்கிடையில் மீனா, செந்திலுக்கு நிறைய முறை போன் செய்தும் எடுக்கவில்லை. பின் மீனா, இதுதான் நீங்கள் என்னிடம் பேசுவது கடைசி என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை பார்த்து செந்தில் அதிர்ச்சி ஆகி கதிர் இடம் சொல்லி இருவரும் தேடி அலைந்து கொண்டு இருந்தார்கள். அப்போது மீனா போனை ஆன் செய்தவுடன் செந்தில் கால் செய்தார்.
பிறகு மீனா இருக்கும் இடத்திற்கு செந்தில் போனார். இருவரும் மனதை விட்டு பேச ஒரு வழியாக அவர்களுக்கு இடையில் நடந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இந்த வாரம் கதிர் சவாரி போனதை நினைத்து ராஜி – கோமதி ரொம்ப வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருந்தார்கள். உடனே கோமதி, ராஜி வந்த பின் தான் இந்த ப்ரச்சனை என்று சொல்ல, மீனா கோபப்பட்டு ராஜிக்கு ஆதரவாக பேசி இருந்தார். இருந்தாலும், வேதனையில் ராஜி வருத்தப்பட்டு உள்ளே சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கதிர், ராஜிவிடம் பணத்தை கொடுக்க, ராஜி வாங்க மறுத்து இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி, நான் எல்லா உண்மையும் எங்கள் வீட்டில் சொல்லப்போகிறேன் என்று ராஜி தன்னுடைய அப்பாவை பார்க்க போனார். இந்த உண்மையை எல்லாம் மீனா கோமதியிடம் சொல்ல, கோமதியும் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்தார். பின் கதிர், ராஜிவை தடுத்து நிறுத்தி எவ்வளவோ சமாதானம் செய்தார். கடைசியில் ராஜி, நான் போடுற கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் நான் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னார். அதற்கு கதிரும் ஒத்துக் கொண்டார். பின் ராஜி, என்னுடைய படிப்பு செலவிற்கு நீ எந்த காசும் கொடுக்க கூடாது. நான் டியூஷன் எடுக்க போகிறேன்.
சீரியல் கதை:
இதை நான் வீட்டிலும் சொல்லி விடுவேன் என்று சொன்னவுடன் கதிர் சம்மதித்தார். அதன் பின் வீட்டுக்கு வந்த ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தையும் சொன்னவுடன் கோமதி அதிர்ச்சி ஆகி மறுத்தார். கடைசியில் ராஜி மிரட்டலுக்கு வேறு வழியில்லாமல் கோமதி ஒத்து கொண்டார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் உள்ளே வந்த உடனே எல்லோரும் பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். இதனால் அவர் முகமே வாடியது. மீண்டும் கோமதி- ராஜி சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது தங்கமயில் வந்தவுடன் அமைதி ஆனார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
இதனால் வேதனைப்பட்ட தங்கமயில், சரவணன் இடம் சொல்லி புலம்ப, அவர் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், சரவணன் தன்னுடைய மொத்த சம்பளத்தையும் அப்பாவிடம் கொடுக்க, அவர், உன் செலவுக்கு எடுத்துக்கொள் என்று சொன்னதற்கு கூட வேணாம் என்று சொல்லி விடுகிறார். இதையெல்லாம் பார்த்து தங்கமயில் ரொம்பவே வேதனைப்படுகிறார். நம்மை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ராஜி-மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
அப்போது ராஜி, கதிரிடம் போட்ட கண்டிஷனை மீனாவிடம் சொல்கிறார். அதற்குப்பின் தங்கமயில் மன வேதனையில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு போவதாக பாண்டியன், கோமதி இடம் சொல்ல அவர்களும் சரி என்று ஒத்துக் கொள்கிறார்கள். சரவணன், தங்க மயிலை கூட்டிக்கொண்டு போகிறார். போகும் வழியில் தங்கமயில் செய்யும் சில விஷயங்கள் சரவணனுக்கு பிடிக்கவில்லை. இதெல்லாம் இன்னும் தங்க மயிலுக்கு வேதனையை கொடுக்கிறது. தங்கமயிலை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு சரவணன் சென்று விடுகிறார். அப்போது தங்கமயில், சரவணன் செய்ததையும் மீனா,ராஜி- கோமதி செய்வதையும் சொல்லி புலம்பி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.