பேங்கில் நகைகளை எடுக்க போன கோமதி-குழலி, பயத்தில் பதறும் தங்கமயில்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
165
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, கண்ணனை பார்த்தவுடன் கோபத்தில் அவரை துரத்த, கண்ணன் தப்பித்து வேகமாக ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜி கீழே விழுந்ததால் அவருக்கு அடிபட்டது. இதனால் கண்ணன் தப்பித்து விட்டார். அந்த சமயம் வந்த கதிர், எல்லா விஷயத்தையும் அறிந்து கண்ணனை கண்டு பிடிக்க உதவுகிறார். ஆனால், கண்ணன் கிடைக்கவில்லை. பின் இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள். பின் இந்த விஷயத்தை வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றார் கதிர்.

-விளம்பரம்-

பின் கதிர், ராஜி இருவருமே வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது கண்ணனை மீண்டும் பார்த்ததாக வண்டி நிறுத்த சொல்லி தேடினார்கள். ஆனால், அது கண்ணனே இல்லை. நேற்று எபிசோடில் பாண்டியன் வீட்டிற்கு தங்கமயில் அப்பா- அம்மா வந்திருந்தார்கள். அவர்கள் தங்கம் மயிலுக்கு தாலி பிரித்து கோர்ப்பது பற்றி பேச, கோமதி மற்ற இரண்டு மருமகளுக்குமே தாலி பிரித்து கோர்த்து விடலாம் என்று சொன்னார். அதற்கு பாண்டியன், மூவருக்கும் ஒரே நாளில் வைக்கலாம் என்று சொன்னார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே தங்கமயில் அம்மா, நாங்கள் என்னுடைய மகளுக்கு எல்லாம் செய்வோம். மற்றவர்களுக்கு யார் செய்வார்கள்? என்று சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டு, மூன்று பேருமே என்னுடைய மகள்கள் தான். நானே செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் தங்கமயிலின் அப்பா- அம்மா பெருமூச்சு விட்டார்கள். பின் நகையை பற்றி கேட்டதற்கும் எல்லா செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னவுடன் அவர்கள் உள்ளுக்குள்ளே சந்தோஷப்பட்டார்கள். பின் வீட்டிற்கு பாண்டியனின் மூத்த மகள் குழலி வந்தார்.

நேற்று எபிசோட்:

இதனால் வீடே கலாட்டா கலவரமாக இருக்கிறது. அதன் பின் அரசி வீட்டிற்கு வெளியே போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக்தி, அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க, இதை எல்லாம் கவனித்த ராஜி, பயங்கரமாக கோபப்பட்டு தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போனார். பின் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. உடனே சக்தி கோபத்தில் ராஜியை அடிக்க போனார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி-சக்தி இடையே வாக்குவாதம் அதிகமாகி கொண்டே இருந்தது. அந்த சமயம் வந்த ராஜி அப்பா திட்டுகிறார். உடனே ராஜி, சக்தி செய்த வேலையை சொன்னவுடன், அவர் கோபப்பட்டு சக்தியை திட்டுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே திட்ட, உடனே கோபத்தில் சக்தியின் அப்பா, என் பையன் மீது எந்த தவறும் இல்லை. ராஜி தான் பொய் சொல்லுவாள் என்று சொல்ல, அண்ணன் – தம்பி இருவருக்குமே வாக்குவாதம் அதிகமாகின்றது. இதனால் நெஞ்சு வலி வந்தது போல அவருடைய அம்மா மீண்டும் நடிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே அவர்கள் சண்டையை விட்டு அமைதியாகி விட்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் குழலி, மூன்று மருமகள்களை வேலை வாங்கியும் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார். இது எல்லாம் பார்த்து மீனா-ராஜிக்கு பயங்கர கோபம் வருகிறது. ஆனால், அவர்கள் எதுவுமே பேசாமல் அமைதியாக தான் இருக்கிறார்கள். அப்போது கோமதி, தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு தங்கமயில்- மீனா நகைகளை எடுக்க பேங்கிற்கு போகிறார். உடனே தங்கமயில், நானும் வருகிறேன் என்று சொன்னவுடன் குழலி, நீ வேண்டாம். வீட்டு வேலையை பார் நான் போகிறேன் என்று சொல்கிறார். இதனால் தங்கமயில் ரொம்பவே பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement