விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ஹாஸ்பிடலில் தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பி இருந்தார். ஆனால், ராஜி பேசியும் அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. பின் ஹாஸ்பிடலுக்கு கோமதி வந்த விஷயம் அறிந்த அவர் அண்ணன்கள் பயங்கரமாக கோபப்பட்டு பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி கேவலமாக பேசி இருந்தார்கள். அந்த சமயம் வந்த பாண்டியனுக்கு ஒன்னும் புரியவில்லை. இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்ட கோமதி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

பின் கதிர் எல்லா உண்மையை சொல்ல, பாண்டியன் டென்ஷன் ஆனார். இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் கோமதி அண்ணன்கள் மோசமாக பேசி இருந்தார்கள். அப்போது கோமதி வெளியே வந்து எதுவும் பேச முடியாமல் இருந்தார். உடனே பாண்டியன், கோமதிக்கு துணையாக நின்று பேசியதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகி இருந்தது. கோமதி அண்ணன்களும் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து சென்று விட்டார்கள். பின் கோமதி தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு துணையாக நின்று பேசியதற்கு நன்றி சொல்லி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார். இதனால் தங்கமயில் அம்மா-அப்பா கொஞ்சம் ஓவராக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று அவர்கள் சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தங்கமயிலின் அப்பா- அம்மா இருவருமே பயந்து ஏதேதோ சொல்லி சமாளித்ததால் பாண்டியனும் அமைதியாக விட்டார். பின் அவர்கள், குலதெய்வ கோயிலில் பொங்கல் வைக்க உங்களை அழைக்க வந்தேன் என்று அந்தர் பல்டி அடித்து சமாளித்தார்கள். பாண்டியனும் கோவிலுக்கு வர சம்மதித்தார். அதற்குப்பின் சரவணன், தன் மாமனார்- மாமியார் பேசியதை பற்றி வருத்தப்பட பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் பஸ் ஸ்டாப்பில் மீனா- ராஜி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
அப்போது வந்து கதிரை வழிமறித்து மீனா, ராஜீயை சைக்கிளில் ஏற்ற சொல்லி கேட்க, கதிரும் ராஜீயை அழைத்து சென்றார். இன்னொரு பக்கம் கோமதி செய்த வேலையை நினைத்து அவருடைய அண்ணன்கள் கோபப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சைக்கிளில் ராஜு- கதிர் வந்து கொண்டிருந்ததை பார்த்து சக்தி வேகமாக பைக்கில் வருகிறார். ஆனால், கடைசியில் சக்தி தான் கீழே விழுந்த மண்ணை கவ்வினார். இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா செய்த வேலையை நினைத்து தங்கமயில் புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அவர்களும் மன்னிப்பு கேட்க, தங்கமயில் பயங்கரமாக தன்னுடைய அப்பா அம்மா மீது கோபப்பட்டு கத்துகிறார். அப்போது கோமதி வந்ததால் அனைவரும் அமைதியாகி விடுகிறார்கள். என்ன நடக்க போகிறது? என்ற வருத்தத்தில் தங்கமயில் இருக்க, அவர் அம்மா ஆறுதல் செல்கிறார். பின் வீட்டில் எந்த கோயிவில் பொங்கல் வைப்பது? என்ன செய்யலாம்? பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்வது ?என்றெல்லாம் தங்கமயில் அம்மா-அப்பா யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






