விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் மீனா போட்ட மீனா மெசேஜால் அதிர்ச்சி ஆன செந்தில் தேடி அலைந்து இருந்தார். ஒருவழியாக இருவரும் மனதை விட்டு பேச, அவர்களின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. பின் கதிர் சவாரி போனதை நினைத்து கோமதி ரொம்ப வருத்தப்பட்டு, ராஜி வந்த பின் தான் இந்த ப்ரச்சனை என்று சொல்ல, வேதனையில் ராஜி அழுது கொண்டே உள்ளே சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கதிர் வந்தவுடன் இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி, நான் எல்லா உண்மையும் எங்கள் வீட்டில் சொல்லப்போகிறேன் என்று ராஜி தன்னுடைய அப்பாவை பார்க்க போனார்.

இதை மீனா, கோமதியிடம் சொல்ல, கோமதியும் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்தார். பின் கதிர், ராஜிவை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார். அப்போது ராஜி, என்னுடைய படிப்பு செலவிற்கு நீ எந்த காசும் கொடுக்க கூடாது. நான் டியூஷன் எடுக்க போகிறேன். இதை நான் வீட்டிலும் சொல்லி விடுவேன் என்று கண்டிஷன் போட கதிரும் சம்மதித்தார். அதன் பின் வீட்டுக்கு வந்த ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி அதிர்ச்சி ஆகி மறுத்தார். உடனே ராஜி மிரட்டலுக்கு வேறு வழியில்லாமல் கோமதி ஒத்து கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த சமயம் பார்த்து தங்கமயில் உள்ளே வந்த உடனே எல்லோரும் பேச்சை நிறுத்த, அவர் முகமே வாடியது. மீண்டும் கோமதி- ராஜி சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது தங்கமயில் வந்தவுடன் அமைதி ஆனார்கள்.
இதனால் வேதனைப்பட்ட தங்கமயில், சரவணன் இடம் சொல்லி புலம்ப, அவர் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விட்டார். நேற்று எபிசோட்டில், சரவணன் தன்னுடைய மொத்த சம்பளத்தையும் அப்பாவிடம் கொடுத்தார். உடனே அவர், உன் செலவுக்கு எடுத்துக்கொள் என்று சொன்னதற்கு, வேணாம் என்று சரவணன் சொல்லி விடுகிறார்.

நேற்று எபிசோட்:
இதையெல்லாம் பார்த்து தங்கமயில், நம்மை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்று வருத்தப்பட்டு புலம்பி இருந்தார். இன்னொரு பக்கம் ராஜி-மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, கதிரிடம் போட்ட கண்டிஷனை மீனாவிடம் சொன்னார். அதற்குப்பின் தங்கமயில், மன வேதனையில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு போவதாக பாண்டியன், கோமதி இடம் சொல்ல அவர்களும் சரி என்று ஒத்துக் கொண்டார்கள். பின் சரவணன், தங்க மயிலை கூட்டிக்கொண்டு போனார் போகும் வழியில் தங்கமயில் செய்யும் சில விஷயங்கள் சரவணனுக்கு பிடிக்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இதெல்லாம் இன்னும் தங்க மயிலுக்கு வேதனையை கொடுக்கிறது. பின் தங்கமயிலை அவருடைய வீட்டில் விட்டு சரவணன் சென்று விட்டார். அப்போது தங்கமயில், சரவணன் செய்ததையும் மீனா,ராஜி- கோமதி செய்வதையும் சொல்லி தன் அம்மாவிடம் புலம்பி அழுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், இதையெல்லாம் கேட்டு கோபப்பட்ட தங்கமயில் அம்மா, பாண்டியன் வீட்டிற்கு சண்டைக்கு போக பார்க்கிறார். ஆனால், அவருடைய கணவர் தடுத்து பொறுமையாக இரு, இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என்று சமாதானம் செய்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் தங்கமயில் அம்மா, நீ எப்படியாவது மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வர பாரு. அந்த வீட்டினுடைய மொத்த கண்ட்ரோலையும் உன் கையில் எடு. உன் மாமியாரை உன் பக்கம் திருப்பு. அதுக்கு என்ன வேலையோ அதை செய் என்று வழக்கம் போல தன்னுடைய மகளுக்கு தேவையில்லாத அறிவுரை எல்லாம் சொல்லி அனுப்புகிறார். இன்னொரு பக்கம் ராஜியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆனால், அதை அவருடைய கணவர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். அப்போது தன்னுடைய மகனுக்கு பெண் வீட்டார் விசாரிக்க வருவதைப் பற்றி ராஜி சித்தப்பா சொல்லி புலம்புகிறார். கடைசியில் மீனா- ராஜி- தங்கமயில் மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்தநாளை பற்றி தங்களுடைய கணவன்மார்களிடமும் பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






