விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வடிவு, நகை பற்றி மறைத்து வைத்த விஷயம் ராஜி அப்பாவிற்கு தெரிந்து பயங்கரமாக சண்டை போட்டார். இருந்தும் நகை எங்கே இருக்கு? என்று வடிவு சொல்லவில்லை. இருவருக்கும் இடையே பயங்கரமாக சண்டை நடந்தது. கடைசியில் வீட்டில் உள்ளவர்கள் உண்மையை உளறி விட்டார். இன்னொரு பக்கம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து தன் அண்ணனிடம் சொல்லி இருந்தார். ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டைக்கு போனார்கள்.
அப்போது ராஜி செய்த வேலை தெரிந்து மொத்த பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்கள். மேலும், கோமதி அண்ணன்கள், பாண்டியனை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். ஆனால், பாண்டியன் வேதனையில் வீட்டுக்கு வந்து விட்டார். பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டிக் கொண்டிருக்க, பாண்டியன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். உடனே கதிருக்கு கோபம் வந்து ராஜியிடம் கத்துகிறார். எனக்கும் என் அப்பாவிற்கும் இடையே ஆயிரம் சண்டை இருக்கும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உன்னால் என் அப்பா அசிங்கப்பட்டு இருக்கிறார்? என்றெல்லாம் கேட்க, கோமதியும் பயங்கரமாக ராஜுவை திட்டுகிறார். கடைசியில் மீனா, ராஜி வேலைக்கு சென்ற விஷயம் தெரியும் என்று உளற பாண்டியனுக்கு கோபம் அதிகமாகி விட, மொத்த குடும்பமே மீனா- ராஜிக்கு எதிராக நின்றது. கடைசியில் பாண்டியன் வருத்தப்பட்டு திட்டிவிட்டு சென்று விட்டார். அதன் பின் கோமதியிடம் மன்னிப்பு கேட்க ராஜி, மீனா இருவருமே சமையல் கட்டுக்கு போனார்கள். ஆனால், கோமதி முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார்.
சீரியல் கதை:
இன்னொரு பக்கம் செந்தில், பாண்டியன் பேசி கொண்டிருந்த போது, கதிர் வந்து மன்னிப்பு கேட்டார். பாண்டியனும் கதிர் மீது கை போட்டு மனதை விட்டு பேசு இருந்தார். பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிடும் போது, மீனா- ராஜி வந்தவுடன் பாண்டியன் கிளம்பி விட்டார். அப்போது கோமதி, நீங்கள் பண்ணியதை மறக்க மாட்டேன்,மன்னிக்க மாட்டேன் என்று திட்டுகிறார். நேற்று எபிசோடில், பாண்டியன்- கோமதி நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு சரவணன் இடம் சொல்ல அவர் ரொம்ப வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் ராஜி- கதிர் இடையே பயங்கரமாக சண்டை நடந்தது.
நேற்று எபிசோட்:
பின் ராஜி மன்னிப்பு கேட்டும் கதிர் ஏற்றுக் கொள்ளாமல் திட்டிவிட்டு வெளியே வந்து விட்டார். இன்னொரு பக்கம் செந்தில், மீனா இடையே சண்டை நடந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன், நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். கோமதி எவ்வளவு ஆறுதல் சொல்லியும் பாண்டியனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மறுநாள் கோமதி சமைத்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உதவ மீனா- ராஜி இருவரும் வருகிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இருந்தாலும், கோமதி அவர்களை திட்டி அனுப்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு சரவணன்- தங்கமயில் வருகிறார்கள். அவர்கள் வந்தவுடன் நடந்த சண்டையை பற்றி தான் பேசுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று தங்கமயில், மீனா- ராஜுவை பயங்கரமாக குறை சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், மீனா- ராஜி இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். கடைசியில் கோமதி, வந்தவுடன் இதெல்லாம் தேவையா? போய் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.