விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் அம்மா, ஊர் முழுவதும் கடன் வாங்கி வைத்திருப்பதால் வீட்டின் முன்பு அசிங்கப்படுத்தினார்கள். இதை பார்த்து தங்கமயில் ரொம்ப வருத்தப்பட்டு தன் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். இன்னொரு பக்கம் மீனாவை சந்தித்த அவருடைய அப்பா, குவாட்டர்ஸ் ஏன் போக வேண்டாம்? நீங்கள் இருவரும் சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும். தயவு செய்து அந்த வீட்டை விட்டு போ என்றெல்லாம் சொன்னார். ஆனால், மீனா ஒத்துக் கொள்ளவே இல்லை. உங்கள் மருமகனை வேண்டுமென்றால் அந்த வீட்டிற்கு போக சொல்லுங்கள் என்றார்.

அரசி வரும் வழியில் குமார் நின்று பேசி இருந்தார். ஆனால், அரசி சரியாக பேசவில்லை. அந்த சமயம் வந்த கதிர், குமாரை அடிக்கப் போனார். உடனே அரசி தடுத்து குமாரை அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதற்குப்பின் மளிகை கடைக்கு தங்க மயிலின் அப்பா வந்தார். அவர் கடையில் எந்த வேலையும் செய்யாமல் கஸ்டமர்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு கோபம் அதிகமானது. பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து கல்லாவிலிருந்து தங்கமயில் அப்பா பணத்தை எடுத்து வைத்துக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன், மளிகை பொருள் வாங்குவதற்கு காசு இல்லை என்று கோமதி இடம் புலம்பி கொண்டிருந்தார். உடனே மீனா, நீங்கள் கொடுத்த 10 லட்சம் இருக்கிறது. அது தரட்டுமா மாமா? என்றார். அதற்கு பாண்டியன், அதை நீங்கள் சீக்கிரம் பேங்கில் கட்டி கடனை முடியுங்கள் என்றார். அதற்குப்பின் செந்தில், எதற்காக அப்பாவிடம் பணத்தை திருப்பி தர பார்க்கிறாய். அதை வைத்து நான் நிறைய பிளான் வைத்திருக்கிறேன். பர்னிச்சர் எல்லாம் வாங்க வேண்டும் என்றார். அதற்கு மீனா, புது வீட்டிற்கு நான் வரவில்லை. நான் இங்கே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். வேண்டுமென்றால் நீங்கள் போங்க என்று திட்டி விட்டு சென்றார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தங்கமயில் அப்பா மாணிக்கம் கடையில் எந்த வேலையுமே செய்யாமல் இருந்தார். பின் வீட்டிற்கு கிளம்பும்போது தேவையான மளிகை பொருள்களை சரவணன் எடுத்து வைத்தார். உடனே மாணிக்கமும் தன்னுடைய வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை எடுத்து வைத்து விட்டு எதையுமே சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். இதையெல்லாம் பார்த்து சரவணன் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் கதிர், நீ படிக்கும் விஷயம் மட்டும் பாரு. நீ டிராவல்ஸ்க்கு வர வேண்டாம் என்றார்.
https://www.youtube.com/watch?v=n_vzwsyo9wo
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சரவணன், உங்க அப்பா கடைக்கு வர வேண்டாம் என்று நான் சொன்னேன். அவர் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்கிறார். பணத்தை திருடிவிட்டால் என்ன செய்வது என்கிறார். தங்கமயில், எங்க அப்பா அப்படி செய்ய மாட்டார் என்று சொல்கிறார். சரவணன், ஒழுங்கு மரியாதையாக உங்க அப்பா கடைக்கு வரவேண்டாம் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு பின் தங்கமயில் கடைக்கு வருகிறார். அப்போது மாணிக்கம், நீ கல்லாவில் உட்காருமா? என்று தங்கமயிலை உட்கார வைக்கிறார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு கோபம் இன்னும் அதிகமாகிறது.






