தனத்தை போல தெலுங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் நடிக்க வந்துள்ள வாய்ப்பு – தவறவிட்டுள்ள தம்பி நடிகர்.

0
3677
jeeva
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ‘வந்தினமா’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் பாருங்க : அண்ணா, நடிகர் விஜய் வீடு அங்க தான் இருக்கா ? அட்ரஸ் கேட்டு பல்ப் வாங்கிய விஜய். அறிய வீடியோ இதோ.

- Advertisement -

தமிழை போல தெலுங்கிலும் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழை போலவே தெலுங்கிலும் அண்ணி கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா தான் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இதே சீரியலில் தம்பி கதாபத்திரமாக நடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட்டிற்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால், அவர் தான் நிராகரித்துவிட்டாராம்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த வெங்கட்டிடம், ரசிகர் ஒருவர் ‘தெலுகு சீரியல்ல இன்ட்ரஸ்ட் இருக்கா ? Chance வந்தா நடிபீங்களா’ என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த வெங்கட். ஏற்கனவே தெலுகு வதினம்மா சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் , சில பல காரணங்களால் அந்த சமயத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement