‘அன்பே சிவம்’ தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்ட ரக்‌ஷா – அவருக்கும் பதில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ? இவருக்கு ரீ – என்ட்ரி தான்.

0
589
anbesivam
- Advertisement -

சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷா ஹோலா. இவர் பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் கன்னட மொழி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கன்னட மொழியில் வந்த பல சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is afaav-1024x1009.jpg

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசன் மூலம் தமிழ் சின்ன திரைக்கு அறிமுகமானார் நடிகை ரக்ஷா ஹோலா. இந்த சீரியல் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், இடையில் இவரை திடீரென்று சீரியலில் இருந்து நீக்கிவிட்டனர். இதுகுறித்து பேசிய அவர், லாக்டௌன் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க.

- Advertisement -

NINI நீக்கப்பட்ட காரணம் :

அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம்னாங்க. ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன். திரும்ப முழு லாக்டௌன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரலை என்று கூறி இருந்தார்.

சொல்லாமல் நீக்கிய சீரியல் குழு :

நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கிய அன்பே சிவம் தொடரில் கமிட் ஆகி இருந்தார். நன்றாக சென்று கொண்டு இருந்த இந்த சீரியலில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து தன் பதிவிட்டுள்ள ரக்ஷா, நான் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதை கூட சீரியல் குழு எனக்கு தெரிவிக்கவில்லை என்று கூறிப்பிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

உடல் எடை காரணமா ? :

மேலும், ரக்ஷா இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு காரணம் அவர் மிகவும் குண்டமாக இருப்பதால் தான் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த சீரியலில் நடிக்கப் போகிறேன் என்று அறிவிப்பை ரக்ஷா வெளியிட்ட போதே நான் முன்பை விட கொஞ்சம் சப்பியாக மாறிவிட்டேன் விரைவில் பழைய படி உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரக்ஷாவிற்கு பதில் கவிதா :

இப்படி ஒரு நிலையில் ரக்ஷாவிற்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்த கவிதா கவுடா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கன்னட நடிகையான இவர் கன்னட பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் இவருக்கு இவர் நடித்த லக்ஷ்மி பிரம்மா தொடரில் இவருடன் இணைந்து நடித்த சந்தன்குமாருடன் திருமணம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement