விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்று சொன்னால் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் சொல்லலாம். மேலும்,பாண்டியன் ஸ்டோர் சீரியலை சிவசேகர் என்பவர் இயக்கி உள்ளார். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது. மேலும்,இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர் ஆகும். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருபவர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. இவர் அன்பால் அனைவரையும் அரவணைப்பார். அவர் தன் கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார்.
இதையும் பாருங்க : திடீர் திருமணம் செய்து கொண்டாரா செம்பருத்தி சீரியல் மித்ரா ? வைரலாகும் வீடியோ.
இந்த குடும்பத்தின் மற்ற மருமகள் மீனா மற்றும் முல்லை. மேலும், இவர்களின் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நீடிக்குமா என்பது தான் இந்த கதையின் சுவாரசியமே. இந்நிலையில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர்.
நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் சித்ராவின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. மேலும், ரசிகர்கள் இந்த நடிகை சித்ரா புகைப்படங்களை அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.