வாழ்கை துணையை பற்றி சொன்ன போது நீ ஏற்றுக்கொள்ளவில்லை – சித்ரா மரணத்தில் பகீர் கிளப்பிய நடிகை.

0
2512
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். நடிகை சித்ரா ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு இன்று அதிகாலை (டிசம்பர் 8) 2.30 ,மணி அளவில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நடிகை சித்ராவுடன் தங்கி இருந்த வருங்கால கணவர் ஹேமந்த் தான் சித்ரா இறந்த போது உடன் இருந்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகை ஷாலு ஷம்மு , சித்ராவின் மறைவிற்குப் பின்னர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை போட்டு இருக்கிறார் அதில் உன்னை நான் இப்படி இறப்பேன் என்று நினைக்கவில்லை நான் இறுதியாக உன்னிடம் பேசியபோது உன்னுடைய வாழ்க்கை துணை குறித்து எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்க வேண்டாம் என்று ஒவ்வொரு நொடியும் உன்னை சமாதானப்படுத்த முயற்சித்தேன் ஆனால் நீ அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அதைப் பற்றி பேசாமல் இருப்பதை தவிர்த்து இருப்பேன் உன்னை நாங்கள் இறந்த அடுத்த நொடி எங்களுடைய மனம் உடைந்து விட்டது

-விளம்பரம்-
Advertisement