மீண்டும் ஷூட்டிங்கில் முல்லை கெட்டப்பில் தனது வருங்கால கணவருடன் சித்ரா – இவரு ஷூட்டிங் ஸ்பாட்லயேதான் இருப்பார் போல.

0
41785
chitra

தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே. விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இந்த தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான் இதில் முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.

நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

- Advertisement -

தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

This image has an empty alt attribute; its file name is 1-110-667x1024.jpg

இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கெட்டப்பில் இருக்கும் சித்ராவுடன், அவரது வருங்கால கணவர் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது. இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சித்ராவை அவரது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை கேட்டார். அதற்கு சித்ரா, முல்லை கெட்டப்பில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement