விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.
இந்நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகை சித்ராவும் ஒருவர். இந்நிலையில் நடிகை சித்ரா அவர்கள் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார். தற்போது அது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமீபத்தில் நடிகை சித்ரா அவர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி வந்தார்.
அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாண்டியன் ஸ்டோரில் மீனாவின் கதாபாத்திரம் பிடிக்குமா? என்று கேட்டு உள்ளார். அதற்கு சித்ரா அவர்கள் மீனாவை பிடிக்காது என்று ஒரு கோபமான ஸ்மைலயுடன் கூறியுள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை சுஜிவுக்கும், சித்ராவுக்கும் சீனியர், ஜூனியர் என்ற பிரச்சினை இருந்ததாக சொல்லப்பட்டது.
அதற்கு பிறகு குமரனுக்கும், சித்ராவுக்கும் இடையே நடந்த பிரச்சனை அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இப்போது சித்ரா அவர்கள் மீனாவை பிடிக்காது என்று சொல்கிறார். இதனால் என்ன கலவரம் வரப்போகிறதோ? ஒருவேளை சீரியலில் மீனாவின் கதாபாத்திரம் பிடிக்கலையா? இல்லை ஹேமாவை பிடிக்கலையா? என்றும் கேட்டு வருகிறார்கள்.
சித்ரா அவர்கள் முதன் முதலில் விஜேவாக தான் தன் பயணத்தை தொடங்கினார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.