பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் சித்ராவிற்கு அஞ்சலி – கண்கலங்கிய நடிகர்கள். உருக்கமான வீடியோ.

0
5598
chitra

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி அளவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சித்ரா, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். மேலும் இதே ஹோட்டலில்தான் சித்ராவை நிச்சயதார்த்தம் முடித்த ஹேமந்த் தங்கியிருக்கிறார். சித்ரா ஹோட்டலுக்கு சென்ற போது தான் குளித்து விட்டு வருகிறேன் அதனால் வெளியே செல்லுங்கள் என்று ஹேமந்த்திடம் கூறியதாகவும் பின்னர் ஹோட்டல் அறையின் வெளியே நின்று கொண்டிருந்த ஹேமந்த் உள்ளே சென்ற சித்ரா நீண்ட நேரம் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியரை அழைத்து வேறு ஒரு சாவியை போட்டு அறையை திறந்து பார்த்தபோது சித்ரா தூக்கிவிடும் தங்கி இருந்ததாக கூறியிருந்தார்.

இதையடுத்து சித்ராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை துவங்கினர். சித்ரா மற்றும் ஹேமந்த்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. ஆனால், சித்ராவின் மரணத்திற்கு பின்னர் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தங்களுக்கு அக்டோபர் மாதமே பதிவு திருமணம் முடிந்து விட்டதாக கூறி பலருக்கும் ஷாக் கொடுத்தார் ஹேமந்த். அதேபோல சித்ராவின் தாயார் கூட தனது மகளை ஹேமந்த் தான் அடித்து கொன்றுவிட்டான் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

ஆனால், சித்ராவின் பிரேத பரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று போலீசார் அடுத்தகட்ட விசாரணையை துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் போலீசார் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி படப்பிடிப்பு தளத்திற்கு ஹேம்நாத் சென்று சித்ராவிடம் தகராறு செய்து வந்ததாகவும் அதேப்போல குடித்துவிட்டு அடிக்கடி சித்ராவிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஹேம்நாத்தை பிரிந்து வந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இப்படி கணவர் மற்றும் தாயார் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாம் நாளாக இன்றும் ஹேமந்த்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் சித்ராவின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement