பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய ரோலில் நடித்து வரும் பிரபலத்தின் வீடு இது தான். அவரே வெளியிட்ட வீடியோ.

0
73039
hema

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

Pandian Stores Hema Modern Look Photos Goes Viral On Internet

பொதுவாக சீரியலில் நடிக்கும் அனைவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக தான் பலரும் நினைத்து வருகிறோம். ஆனால், அது ஒரு சிலருக்கு மட்டும் தான் அமையும். சீரியலில் நடிக்கும் பல பிரபலங்கள் ஏழ்மையான சுழிலில் இருந்து வந்தவர்கள் என்பது இது ஒரு சான்று. பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா என்ற கதாபத்திரத்தில் நடித்து வரும் பிரபலமான நடிகை ஹேமாவின் வாழ்க்கையும் அப்படி தான்.

இதையும் பாருங்க : அம்மா இறந்த பின்னர் ஆஸ்காரை துளைத்துள்ள ரஹ்மான் – பின்னர் அதை எப்படி கண்டுபிடித்துள்ளார் பாருங்க.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா.இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார்.

வீடியோவில் 10 நிமிடத்தில் பார்க்கவும்

இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஹேமா தனது யூடுயூப் பக்கத்தில் தனது வீட்டின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement