பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவின் உண்மையான ஒரிஜினல் ஹேர் ஸ்டைல் – இப்போ அவர் வைத்திருப்பது விக்காமே.

0
3960
venkat
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி கொண்டு இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார்,காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசமான கதை ஆகும். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-13.jpg

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட் ரங்கநாதன். இவர் 1989 ஆம் ஆண்டு மே மாதம் பழனியில் பிறந்தார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர்.

இதையும் பாருங்க : போட்டோவ விடுங்க – பவித்ரா சுதர்ஷன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ. இதான் உண்மை

- Advertisement -

அதன்பிறகு சீரியல் நடிகர் ஆனார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர்களிலும் நடித்து வருகிறார். இது தவிர இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 2-3.jpg

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் இந்த தொடரில் விக் வைத்துக்கொண்டு தான் நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவரது சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அது தான் இவரது ஒரிஜினல் ஹேர் ஸ்டைல்.

-விளம்பரம்-
Advertisement