‘கிழக்கு வாசல்’ ஷூட்டிங் துவங்கி நீக்கப்பட்ட சஞ்சீவ் – அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்.

0
1003
Jeeva
- Advertisement -

டிவியில் ஒளிபரப்பாகும் முன்னே நடிகர் சஞ்சீவ் சீரியலில் இருந்து மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் சஞ்சீவ். இவரை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இவர் விஜய்யின் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து இருந்தார் சஞ்சீவ்.

-விளம்பரம்-

மேலும், சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பிரபலம் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் தான் சஞ்சீவ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் இவர் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்.

- Advertisement -

மேலும், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பது மட்டுமில்லாமல் தொகுப்பாளராக டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சஞ்சீவ் புதிய தொடர் ஒன்றில் கமிட் ஆனார். ராதிகா சரத்குமார் தயாரிக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடிக்க சஞ்சீவ் ஒப்பந்தமானார். இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது.

-விளம்பரம்-

சஞ்சீவ் இந்த தொடரில் கமிட் ஆக இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது. அதில் ராடான் சாய்ஸில் வந்ததாக ஒரு தகவலும், எஸ்.ஏ.சி மூலமா சீரியலுக்குள் வந்ததா இன்னொரு தகவலும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பே இந்த தொடரில் இருந்து சஞ்சீவ் நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பதலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த சீரியலில் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து சஞ்சீவ் கூறுகையில் ‘இந்த சீரியலின் பூஜையில் கலந்து கொண்டது உண்மைதான். ஷூட்டிங் தொடங்கி சில காட்சிகளில் நடிக்கவும் செய்தேன். ஆனால், இப்போது நான் இந்த சீரியலில் இல்லை. நீங்க இந்த சீரியலில் பண்ணவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால், அதற்கான காரணத்தை நான் இப்போது மீடியா முன்பு விளக்கமாக பேச விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement