பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் கதிரின் மகன் – ப்பா, இவ்ளோ மகன் இருக்காரா கதிருக்கு. புகைப்படம் இதோ.

0
2633
kumaran

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

இதில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் குமரன் சின்னத்திரத்தில் அறிமுகமானது உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் ஒன்றில்தான் அதன்பின்னர் இவர் மாப்பிள்ளை ஈரமான ரோஜாவே என்று பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி தான். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் குமரன் தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

இதையும் பாருங்க : நிறைவடைய இருக்கிறதா ஜீ தமிழின் முக்கிய சீரியல் – ஆமா, அவரே போய்ட்டாரே. அப்புறம் என்ன பண்ணுவாங்க.

- Advertisement -

இதற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். அதே போல தனது பிறந்தநாளை பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார். அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் அனைவரும் இருக்க கேக் வெட்டிய குமரன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் குமரனின் மனைவி மற்றும் மகனும் இருந்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டிற்கு தனது மகனை குமரன் அழைத்து வந்தது இதான் முதல் முறை. (சென்ற ஆண்டு குமரன் பிறந்தநாள் கொண்டாடத்தில் சித்ரா இருந்தாங்க)

குமரனின் மனைவி வேறு யாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமடைந்த சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அதே போல திருமணத்திற்கு பின்னர் நடிகை சுஹாசினி, நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement