விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள்.
இதையும் பாருங்க : நடிகர் யோகி பாபுவின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறிந்திடாத விஷயம்.
குமரன் சின்னத்தையும் அறிமுகமானது உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் ஒன்றில்தான் அதன்பின்னர் இவர் மாப்பிள்ளை ஈரமான ரோஜாவே என்று பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிதான். அப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் குமரன் அடிக்கடி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.
அந்த வகையில் சமீபத்தில் குமரன் லைவ் சாட்டில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், எங்கள் அனைவருக்கும் உங்களை பிடிக்கும் ஆனால் நீங்கள் ரொம்ப தற்பெருமை பேசுற மாதிரி இருக்கே. அது ஏன் குமரன்? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குமரன் ஒருவேளை நான் தற்பெருமை தான் பேசுறேன் ? இருக்கும் போல. ஆனா, என்னோட தற்பெருமைனால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நான் பார்த்துக்கிறேன் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்
சமீபத்தில் கூட குமரன் கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியாக சில கையுறைகளையும், முக கவசங்களையும் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில ரசிகர்களோ நீங்கள் செய்யும் உதவியை கண்டு நாங்களும் உதவி செய்தோம் என்று கூறி இருந்தார்கள். அதற்க்கு குமரன், தான் இது போன்ற உதவிகளை எப்போதிலிருந்தே செய்ய துவங்கி விட்டேன் என்று கூறியுள்ளார்.