‘என்னை மன்னிச்சிருங்க’ சீரியலில் இருந்து வெளியேறுவதாக திடீரென்று அறிவித்த வெங்கட்.

0
19062
venkat
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார்.

இதையும் பாருங்க : தலைவி படத்தின் இரண்டாம் பாகத்தில் அம்மாவின் இது பற்றி தான் இருக்கும் – படத்தின் முக்கிய பிரபலம் தகவல்.

- Advertisement -

அதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். ஆனால், இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் ரோஜா சீரியலிலும் நடித்து வருகிறார்.

May be an image of 2 people

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெங்கட் ‘உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி உங்கள் அஸ்வின் நிரந்தரமாக ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுகிறார். உங்களை ஏமாற்றியதற்க்கு மன்னித்துவிடுங்கள். ஆனால், நீங்கள் என்னை ஜீவாவாக தொடர்ந்து பார்க்கலாம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement