இதெல்லாம் அவங்க புருஷன் பார்த்தா என்ன நினைப்பார் – கதிர் முல்லையின் முத்தக்காட்சி. கேலி செய்யும் ரசிகர்கள்.

0
2514
chitra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

இதில் முல்லையாக நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

- Advertisement -

தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. அடிக்கடி இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை கூட பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் இவர்களின் திருமணம் பற்றிய தேதி இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இவர் தொடர்ந்து பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த சீரியலின் பிரமோ ஒன்று வெளியாகி இருந்தது அதில் குமரன் சித்ராவிற்கு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் பலர், இதெல்லாம் அவங்க புருஷன் பார்த்தா என்ன நினைப்பார் என்று கலாய்த்து வருகிறார்கள் இருப்பினும் ஒரு சிலரோ எத்தனை மாதங்கள் கழித்து கதிர்முலை கதாபாத்திரத்தில் ரொமான்ஸ் ஆரம்பித்ததை நினைத்து சந்தோஷப் பட்டு வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement