பீச்சில் நடந்த ரிசப்ஷன். காதல் கணவருக்கு ஆங்கில முத்தம் கொடுத்த திவ்யா. வைரலாகும் புகைப்படம்.

0
38369
Divya
- Advertisement -

தொகுப்பாளர்கள் என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. டிடி, கோபிநாத், ஜெகன், மாகாபா, பிரியங்கா என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் திவ்யா. திவ்யா அவர்கள் முதலில் வி.ஜே.வாக தான் அறிமுகமானார். சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமான வி.ஜே.வாக திவ்யா மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதோடு பத்து வருடங்களாக இவர் மீடியா துறையில் தான் பயணித்தார். பின்னர் பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணி ஆற்றி உள்ளார்.

-விளம்பரம்-
Popular TV anchor and singer Divya gets married to Shibu - Tamil Movie Cinema News

பின்னர் மலையாள மொழியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு பாடகியும் ஆவார். மேலும், இவர் வில்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை, ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். அதோடு தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பாடி உள்ளார். சமீப காலமாகவே சின்னத்திரை, சினிமா என எதிலுமே காணாமல் இருந்தார் திவ்யா. இவர் ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர்.

- Advertisement -

பின் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். ஆனால், சில வருடங்களாக தொகுப்பாளினி திவ்யா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதோடு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அவர் தொலைக்காட்சி பக்கமே காணவில்லை. இது குறித்து பலரும் வினவினார்கள். இந்நிலையில் தான் இவர் குறித்து ஒரு சந்தோசமான செய்தி சமூக வலைத்தளங்களில் வந்து உள்ளது. அது என்னவென்றால் தொகுப்பாளினி திவ்யா அவர்களுக்கு கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி திருமணம் நடந்து உள்ளது. மேலும், தொகுப்பாளினி திவ்யா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பரான சிபு தரகன் என்பவரை காதலித்து வந்து உள்ளார்.

பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே போல திவ்யாவின் திருமண ரிசப்ஷன் பீச்சில் செட் அமைக்கப்பட்டு நடந்தேறியது. அப்போது தனது காதல் கணவருக்கு ஆங்கில முத்தம் கொடுத்து சந்தோசத்தை வெளிப்படுத்தினர் திவ்யா. அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement