‘டேய் உங்களுக்கு வேற பொழப்பே இல்லையா’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.

0
1155
Pandian
- Advertisement -

ஒரே வீட்டில் மூன்று பேர் கர்ப்பமாக இருப்பதை குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பழமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதோடு தமிழில் கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மூர்த்தி குடும்பத்துக்கும் மீனாவின் அப்பா ஜனார்தனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வெளியே வந்து விடுகிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

பின் கதிர் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். வீட்டை கட்டும் வரை கதிர் வீட்டில் இருக்க முடிவு எடுக்கிறார்கள். மூர்த்தியின் குடும்பம் தாங்கள் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதனால் மூர்த்தியின் குடும்பத்தை பழிவாங்க ஜனார்த்தன் திட்டம் போடுகிறார். கண்ணனுக்கு அரசாங்க வேலை கிடைக்கிறது. இப்படி அடுத்து அடுத்து பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஐஸ்வர்யா, தனம் முல்லை இருவரும் கர்பமாக இருக்கின்றனர்.

சீரியலின் கதை:

இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் எல்லாம் வியந்து அவர்களை விசாரித்து செல்கிறார்கள். இதனால் மூர்த்தி குடும்பமே ஒரே சந்தோஷத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சீரியலின் ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, மூன்று பேரும் கர்பகமாக இருப்பதை அறிந்து கொண்டு அக்கம் பக்கத்தினர் மூர்த்தியின் வீட்டிற்கு வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

அவர்கள், நீங்கள் இந்த வீட்டை எப்போது காலி பண்ணுவீர்கள்? நாங்கள் ஓனரிடம் அட்வான்ஸ் கொடுத்து இந்த வீட்டில் இருக்கப் போகிறோம். ஏன்னா, ஏழு வருஷமகா இந்த பொண்ணுக்கு குழந்தை இல்லை என்று சொல்கிறார்கள். இந்த ப்ரோமோவை பார்த்து தான் நெட்டிசன்கள், மருத்துவமனைக்கு போகாமல் வீட்டிற்கு குடியேறினால் குழந்தை பிறக்குமா? இந்த மூடநம்பிக்கை எல்லாம் எப்போது மாறப்போகிறது. இப்படி எல்லாம் சீரியலை கொண்டு செல்வதா? என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

அது மட்டும் இல்லாமல் ஊரே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல் இவர்கள் சாதனை செய்தது போல பெருமையாக இருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ரசிகர்கள் சீரியலுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். என்னதான் சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து கிண்டல் செய்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டாப்பில் இடம் பிடித்து இருக்கிறது.

Advertisement