மௌன ராகம், ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டதை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் விஜய் டிவி செய்த மாற்றம்.

0
3180
Pandian-stores

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். இதுகுறித்து இந்த சீரியலில் நடித்து வரும் சரண்யா வெளியிட்ட வீடியோவில், இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதற்கான காரணம் எனக்கே தெரியாது என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போதைய ஹிட் தொடராக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இனி ஒரு மணி நேரம் ஒளிபரப்ப போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் திங்கள் கிழமை (செப்டம்பர் 21) முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும்.

-விளம்பரம்-
Advertisement