இரவு 12 மணிக்கு மேல் நடு ரோட்டிலேயே பஸ்ட் நைட் சீன் – ரகசியம் சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.

0
98396
meena
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஒன்று. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையை மையமாக கொண்ட கதை ஆகும். தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் 300 அத்தியாயங்களை வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதை கொண்டாடும் விதமாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 300வது நாள் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை பிரம்மாண்ட அளவில் சமீபத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-
Image result for pandian stores meena

இந்த சீரியலில் இரண்டாவது ஜோடியாக இருப்பவர்கள் மீனா–ஜீவா. உண்மைய சொல்லப்போனால் இந்த சீரியல் இந்த அளவிற்கு தூள் கிளப்ப காரணமாவர்களுள் இவர்களும் ஒருவர். இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். சென்னையில் ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.

இதையும் பாருங்க : பாகுபலி நடிகரின் வீட்டிற்கே சென்று கோடி ரூபாய் காரை பரிசளித்த சல்மான் கான்.

- Advertisement -

பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடிக்க முதன் முதலாக ஹேமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து குலதெய்வம் சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கு பிறகு ஹேமா அவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

வீடியோவில் 5:25 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி தொடரில் இவர் செவ்வந்தி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சீரியலில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது கூட ஹேமா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹேமா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

அதில் அவர் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொகுப்பாளினி ஒருவர் ஹேமா நடித்த ஒரு பஸ்ட் நைட் காட்சி புகைப்படத்தைக் காட்டி இது குறித்து கூறுங்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு ஹேமா அவர்கள் கூறியது, இது மெல்லத் திறந்தது சீரியலில் எடுக்கப்பட்ட காட்சியின் புகைப்படம். உண்மையை சொல்லப்போனால் இந்த சீரியலின் பஸ்ட் நைட் சீன் நடு ரோட்டில் நடந்தது. அப்போ இந்த சீரியல் சீக்கிரம் சீக்கிரமாக காட்சிகள் ஒளிபரப்பு செய்வதாக இருந்தது. அதனால் எங்களுக்கு ரூம் கிடைக்கவில்லை. அதனால் சீரியலின் இயக்குநர் இரவு 12 மணிக்கு மேல் நடு ரோட்டிலேயே பஸ்ட் நைட் சீன்னுக்கு தேவையான செட்டை போட்டு காட்சி எடுக்கப்பட்டது. இது என்னால் மறக்கவே முடியாது என்று சொன்னார்.

Advertisement