சீரியலில் மட்டுமல்ல நிஜயத்திலும் கர்ப்பம் தான்- பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட புகைப்படம்.

0
4362
hema
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : யாருனு தெரியுதா ? பிரம்மாண்ட இயக்குனர் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா ?

- Advertisement -

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும், இந்த சீரியலில் இவர் கர்ப்பமாக இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது இவர் உண்மையாகவே கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதனை சமீபத்தில் உறுதி செய்து இருந்தார் ஹேமா. இந்த நிலையில் நடிகை ஹேமா, போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ.

-விளம்பரம்-
Advertisement