யாருனு தெரியுதா ? பிரம்மாண்ட இயக்குனர் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா ?

0
1375
shankar
- Advertisement -

சினிமா திரை உலகில் பிரமாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குனர் ஷங்கர் தான். மேலும், சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், வித்தியாசமான கதைக் களத்தையும் கொண்டவர். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஷங்கர் படத்துக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம்.சங்கர் அவர்கள் டிப்ளமோ மெக்கானிக் படிப்பு படித்தவர். மேலும், சினிமாவில் சங்கர் இயக்குனர் மட்டுமல்லாமல் தற்போது எஸ். பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-
சிவாஜி படத்தில் ஷங்கர்

இவருடைய படங்கள் எல்லாமே தொழில்நுட்ப நுண்ணறிவும், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றம், மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரும் சிந்தனை கருத்துக்கள், படத்தில் காட்டப்படும் இடங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய படங்கள் எல்லாமே வித்தியாசமான முயற்சிகளிலும், புதுப்புது படைப்புகளாக பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

- Advertisement -

இவருடன் மட்டுமல்லாமல் சங்கர் அவர்கள் பவித்ரன் என்ற ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இதற்கு பின்னர் தான் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த “ஜென்டில்மேன்” என்ற படத்தை இயக்கினார்.

மேலும்,சங்கர் அவர்கள் திரை உலகிற்கு வருவதற்கு முன்னால் மேடை நாடகங்களில் வசனம், கதை எழுதுவது போன்ற வேலைகளை செய்து இருந்தார். இதற்குப் பின்னர் தான் பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இடம் எழுத்தராக சேர்ந்தார். பின் உதவி இயக்குநராக மாறினார். மேலும், இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்து கொண்டே ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்து உள்ளார்.இப்படி ஒரு நிலையில் ஷங்கர் தலை காண்பித்துள்ள சில படங்களின் லிஸ்ட் இது.

-விளம்பரம்-
Advertisement