வேறு சேனலில் புதிய சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – அப்போ, இனி PSல தொடருவரா ?

0
672
pandianstores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய பிரபலம் வேறு ஒரு தொடரில் நடிக்க உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலை வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி வடிநம்மா என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.

இதையும் பாருங்க : ஓரின சேர்க்கையாளராக நடிக்க ஆசை – படு ஒப்பனனாக கூறிய தமிழ் நடிகர் (இவர் எல்லா விஷயத்தையும் கரக்ட்டா பேசுறாரு பா)

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இந்த சீரியலில் ஆரம்பத்தில் முல்லையாக நடித்து இருந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். அவரது இழப்பு சின்னத்திரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீரியலில் கதிர்– முல்லை ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். தற்போது இந்த தொடர் மக்கள் மத்தியில் படு ஹிட் ஆன தொடராக மாறி வருகிறது.

சீரியலின் தற்போதைய நிலை:

அதற்கு காரணம் இந்த தொடர் எந்த ஒரு மொழியின் ரீமேக்கும் இல்லை. முதன் முதலாக தமிழில் எழுதப்பட்ட ஒரு தொடர் என்று சொல்லலாம். இது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது சீரியலில் கதிர்-முல்லை வீட்டை விட்டு வெளியே சென்றதால் மூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூர்த்தியின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் மொத்த குடும்பமும் கஷ்டப்படுகிறது. பின் மீனாவின் அப்பா வந்து உதவி செய்கிறார்.

-விளம்பரம்-

மூர்த்தி ஸ்டாலின் குறித்த தகவல்:

அடுத்து என்ன நடக்குமோ? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த தொடரில் முக்கிய நபராக நடிக்கும் மூர்த்தி என்கிற ஸ்டாலின் தற்போது வேறொரு தொடரிலும் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்டாலின் முத்து. இவர் 12 ஆண்டுகளுக்கு மேல் நடிப்பு துறையில் இருக்கிறார்.

மூர்த்தி ஸ்டாலின் நடிக்கும் புது சீரியல்:

பிரபல தமிழ் இயக்குனர் பாரதிராஜாவின் அண்ணன் மகன் தான் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மூர்த்தியாகவே எல்லோர் வீட்டிலும் வாழ்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்டாலின் அவர்கள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பச்சக்கிளி என்ற தொடரில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அதற்கான புரோமோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் மூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement