இன்று பிறந்தநாள் கொண்டாடிய இரண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகள் – ஒருவருக்கு மட்டும் வாழ்த்து சொன்ன சித்ரா.

0
4804
chitra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

இதையும் பாருங்க : ‘சோத்துக்கே வழி இல்ல இதுல நீங்க வேற ‘ அபிராமி பதிவிட்ட வீடீயோவால் கடுப்பான ரசிகர்கள்.

- Advertisement -

அதே போல இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் ஹேமா ராஜ் குமார் மற்றும் சுஜிதா இருவருக்குமே இன்று (ஜூலை 12) ஒரே நாளில் பிறந்தநாள். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்களும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இதே நிகழ்ச்சியில் நடித்து வரும் சித்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஜிதாவிற்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ள்ளார். ஏற்கனவே நடிகை சித்ரா ரசிகர்கள் கேட்கும் கேட்கும் பதில் அளிக்கும் போது, ரசிகர் ஒருவர், அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாண்டியன் ஸ்டோரில் மீனாவின் கதாபாத்திரம் பிடிக்குமா? என்று கேட்டு உள்ளார். அதற்கு சித்ரா அவர்கள் மீனாவை பிடிக்காது என்று ஒரு கோபமான ஸ்மைலயுடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

-விளம்பரம்-
Advertisement