நீங்களுமா ? முல்லையின் அந்தரத்தில் தொங்கியபடி யோகா கண்டு புலம்பும் ரசிகர்கள்.

0
96150
chitra
- Advertisement -

தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகைகளாக அசத்தி வருகிறார்கள். அதிலும் விஜய் டிவியில் தொகுப்பளராக இருந்த ஜாக்லின், பிரியா பவானி ஷங்கர், ரம்யா என்று பலரும் தொகுப்பாளினியாக இருந்து தற்போது நடிகைகளாகவும் அசத்தி வருகிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சி தொகுப்பாளியாக இருந்து தற்போது சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை சித்ரா. விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்று சொன்னால் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருபவர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. இவர் அன்பால் அனைவரையும் அரவணைப்பார். அவர் தன் கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார்.

இதையும் பாருங்க : விஜய்காக எழுதிய கதை. ஆனால், நடிக்க போவது ரஜினி. சிறப்பான தரமான சம்பவம்.

- Advertisement -

இந்த குடும்பத்தின் மற்ற மருமகள் மீனா மற்றும் முல்லை. மேலும், இவர்களின் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நீடிக்குமா என்பது தான் இந்த கதையின் சுவாரசியமே. இந்நிலையில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார்.

நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்ரா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம் அந்த வகையில். சமீபத்தில் ஆந்திரத்தில் தலைகீழாக தொங்கி யோகாசனம் செய்த சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பொதுவாக நடிகைகள் தான் இதுபோன்ற யோகாசன புகைப்படங்களை வெளியிட்டது வழக்கம். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் இந்தப் போஸை கண்டு ரசிகர்கள் நீங்களுமா என்று சாக்கடைந்து உள்ளார்கள்.

Advertisement